போலி குறுஞ்செய்தியை தவிர்க்கவும்: மின் வாரியம்

Added : ஆக 16, 2022 | |
Advertisement
சென்னை : 'போலியாக வரும் குறுஞ்செய்திகளை தவிர்க்கவும்' என, பொது மக்களை, தமிழக மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.தமிழகத்தில் பலரின் மொபைல் போன் எண்களுக்கு, 'முந்தைய மாத மின் கட்டணத்தை செலுத்தாததால், இன்று இரவு முதல் மின் வினியோகம் துண்டிக்கப்படும்; 'உடனே மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்' என்று, போலியான தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.அதில் குறிப்பிட்டுள்ள மொபைல்
போலி குறுஞ்செய்தியை தவிர்க்கவும்: மின் வாரியம்

சென்னை : 'போலியாக வரும் குறுஞ்செய்திகளை தவிர்க்கவும்' என, பொது மக்களை, தமிழக மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் பலரின் மொபைல் போன் எண்களுக்கு, 'முந்தைய மாத மின் கட்டணத்தை செலுத்தாததால், இன்று இரவு முதல் மின் வினியோகம் துண்டிக்கப்படும்; 'உடனே மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்' என்று, போலியான தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.அதில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணில் பணத்தை செலுத்தி, சிலர் ஏமாந்தும் உள்ளனர். போலியாக அனுப்பப்படும் தகவலை நம்பக் கூடாது என, மின் வாரியம் சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் வெளியூர் சென்றிருக்கும் சிலர், மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் காரணமாக, போலி மொபைல் எண்களில் மின் கட்டணத்தை செலுத்தி ஏமாறுவதாக தெரிகிறது. இதையடுத்து 'தாங்கள் மின் கட்டணம் செலுத்தாததால் மின் தடை செய்யப்படும் என்று தங்களின் வங்கி விபரம் கேட்டு அல்லது ஏதேனும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளுமாறு வரும் போலியான குறுஞ்செய்திகளை தவிர்க்கவும்.

'மின்னகம் மையத்தை, 94987 94987 எண்ணில் தொடர்பு கொள்ளவும்' என, மின் வாரியம் மீண்டும் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X