மத்திய அரசின் பிடியில் தமிழக போலீஸ்; இளங்கோவன் குற்றச்சாட்டு

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (43) | |
Advertisement
சென்னை : ''தமிழக காவல் துறை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டில்லி காவல் துறையை போல் செயல்படுகிறது,'' என, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் பேசினார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில், 75ம் ஆண்டு சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, தேசியக் கொடி ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார்.பின், 3,200 அடி நீளமும், 15 அடி அகலமும் உடைய தேசிய
மத்திய அரசு, தமிழக போலீஸ்,  இளங்கோவன் குற்றச்சாட்டு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : ''தமிழக காவல் துறை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டில்லி காவல் துறையை போல் செயல்படுகிறது,'' என, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் பேசினார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில், 75ம் ஆண்டு சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, தேசியக் கொடி ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார்.பின், 3,200 அடி நீளமும், 15 அடி அகலமும் உடைய தேசிய கொடியை கையில் பிடித்து, காங்கிரசார் பாதயாத்திரையாக சென்று, சென்னை அண்ணா சாலை அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில் தங்கபாலு, கிருஷ்ணசாமி, டாக்டர் செல்லக்குமார், ஹசீனா சையது, சிவராஜசேகரன், ரஞ்சன்குமார், டில்லிபாபு, காண்டீபன் பங்கேற்றனர்.


latest tamil news


முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் பேசுகையில், ''செப்., 7ம் தேதி ராகுல் தலைமையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் துவங்குகிறது. இந்த துவக்க விழா, காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கான கால்கோள் விழாவாக அமையும்,'' என்றார்.முன்னாள் தலைவர் இளங்கோவன் பேசுகையில், ''காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்கிறார்.

ஆனால், ஒரு சில காவல் துறை அதிகாரிகள் அதை செயல்படுத்துவது இல்லை.''தமிழக காவல் துறை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டில்லி காவல் துறை போல சில நேரங்களில் செயல்படுகிறது. இதுபோல செயல்படும் அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

அழகிரி பேசுகையில், ''50 ஆண்டுகளாக, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாத போதும், தமிழகத்தில் இருந்து காஷ்மீர் வரை, ராகுல் துவக்கும் நடைபயணம், அவரை பிரதமராக்கும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
enkeyem - sathy,இந்தியா
16-ஆக-202214:39:15 IST Report Abuse
enkeyem தமிழக காங்கிரசில் இருக்கும் பிரபலங்கள் அனைவருமே திராவிட குடும்ப கட்சியின் அடிமைகள் மற்றும் விசுவாசிகள். காங்கிரஸ் கட்சி பெயரளவுக்குத் தான்
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
16-ஆக-202214:35:12 IST Report Abuse
MARUTHU PANDIAR இந்த ஆள் பேசுறதெல்லாம் செய்தியாகப் போட்டு.....
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
16-ஆக-202214:06:01 IST Report Abuse
Soumya தோல்வி விரக்தியின் உச்சக்கட்டத்தில் இருப்பான் போலருக்கேப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X