ஐகோர்ட்டில் சுதந்திர தின விழா சிறப்பு தபால் தலை வெளியீடு

Added : ஆக 16, 2022 | |
Advertisement
சென்னை : நாட்டின் 75வது சுதந்திர தின விழா, சென்னை உயர் நீதிமன்றத்தில் கொண்டாடப்பட்டது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா, மகாதேவன், கிருஷ்ணகுமார், தலைமை செயலர் இறையன்பு, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், டி.ஜி.பி., சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்,
ஐகோர்ட்டில் சுதந்திர தின விழா சிறப்பு தபால் தலை வெளியீடு



சென்னை : நாட்டின் 75வது சுதந்திர தின விழா, சென்னை உயர் நீதிமன்றத்தில் கொண்டாடப்பட்டது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா, மகாதேவன், கிருஷ்ணகுமார், தலைமை செயலர் இறையன்பு, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், டி.ஜி.பி., சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, அரசு பிளீடர் முத்துகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சென்னை உயர் நீதிமன்ற கட்டடம் கட்டப்பட்டு, 160 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது.

தபால் தலையை, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி வெளியிட, மூத்த நீதிபதி துரைசாமி பெற்றுக் கொண்டார்.பின், உயர் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணிபுரிந்து வரும், நான்கு டிரைவர்களுக்கு தங்கப் பதக்கத்தை, தலைமை நீதிபதி வழங்கினார்.




கீழமை நீதிமன்றம்



அல்லிக்குளம் நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.இதேபோல, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய அலுவலகத்தில் ஆணைய தலைவர் ஆர்.சுப்பையா தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தில், அதன் தலைவர் அமல்ராஜ் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X