தி.மு.க., அரசுக்கு எதிராக போராட்டம்: அ.ம.மு.க., பொதுக்குழு தீர்மானம்

Added : ஆக 16, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை: தி.மு.க., ஆட்சியின் அவலங்களை மக்கள் மன்றத்தில் தோலுரித்து காட்டும் வகையில், பொதுக் கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த, அ.ம.மு.க., முடிவெடுத்து உள்ளது.சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:* பெட்ரோல், டீசல், காஸ்
TTV, Dhinakaran, AMMK

சென்னை: தி.மு.க., ஆட்சியின் அவலங்களை மக்கள் மன்றத்தில் தோலுரித்து காட்டும் வகையில், பொதுக் கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த, அ.ம.மு.க., முடிவெடுத்து உள்ளது.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* பெட்ரோல், டீசல், காஸ் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து கொள்ளலாம் என, காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்த முடிவை மாற்ற வேண்டும். ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் எரிபொருள் விலையை கொண்டு வர வேண்டும்


latest tamil news



* மாநில அரசின் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். மத்திய அரசின் சுங்க சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்

* சொத்து வரி, மின் கட்டணத்தை தி.மு.க., அரசு உயர்த்தியுள்ளது. குடும்ப தலைவிகளுக்கு 1,000 ரூபாய், காஸ் மானியம் 100 ரூபாய் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை, தி.மு.க., அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்

* தி.மு.க., ஆட்சியின் அவலங்களை மக்கள் மன்றத்தில் தோலுரித்து காட்டும் வகையில், பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்

* அ.ம.மு.க., விதிகளின்படி, பொதுச்செயலர், தலைவர், துணைத் தலைவர் பதவிக்காலம் 2023 ஏப்ரலுடன் முடிகிறது. இப்பதவிகளுக்கு தேர்தல் நடக்கும்போது, தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும்.இவை உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினகரனை, தன் கட்டுக்கள் வைத்திருப்பதாக எண்ணி, பல கட்டளைகளைப் பிறப்பித்து வரும், அவரது சித்தி சசிகலா, தினகரனின் நேற்றைய அறிவிப்பைக் கேட்டு கடும் அதிர்ச்சியில் உறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.தினகரன், பழனிசாமி, பன்னீர்செல்வம், திவாகரன் என அனைவரையும் ஒருங்கிணைத்து, அ.தி.மு.க.,வுக்கு தானே பொதுச் செயலர் என்ற நிலையை ஏற்படுத்த நினைக்கும் சசிகலாவை, பழனிசாமி கண்டுகொள்வதே இல்லை.

பன்னீர்செல்வம் மட்டும், இப்போதைக்கு ஆதரவு அளித்து வருகிறார். இந்நிலையில், தினகரனும் தன் பிடியிலிருந்து நழுவுகிறாரே என, சசிகலா, நெருங்கியவர்களிடம் புலம்பி வருகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
16-ஆக-202220:09:52 IST Report Abuse
Vena Suna அதிமுக பெயரை கெடுத்தவர்கள் இவர்கள் தான்.
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
16-ஆக-202219:53:28 IST Report Abuse
J. G. Muthuraj போராட்டம்....உங்க கட்சியின் ஆட்டமே ஒரு போர் அடிக்கிற சமாசாரம் தான்.....
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
16-ஆக-202219:32:43 IST Report Abuse
M  Ramachandran கொள்ளை கும்பலும் கொலை காரா கும்பலும் மக்கள்லை என்னவென்று (maanadayarkal yendru)நினைக்கிறார்கள். எதைய வேண்டுமானாலும் என்ன வேண்டுமாலும் பேசலாம் மென்று நினைத்து பேசுவதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X