167 ஆண்டு பழமையான ரயில் இன்ஜின் இயக்கம்

Added : ஆக 16, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை : உலகின் பழமையான ரயில் இன்ஜின் 'இஐஆர்-21'. இங்கிலாந்து நாட்டில், 1855ல் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் இன்ஜின் 167 ஆண்டுகள் பழமையானது.ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1909ம் ஆண்டு வரை இந்தியாவில் இது ஓடியது.பின்னர், பீஹார் மாநிலம் ஜமால்பூர், மேற்கு வங்க மாநிலம் ஹவுரா ரயில் நிலையங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன.உலகில், பயன்பாட்டில் இருக்கும் மிகப் பழமையான ரயில்
167 ஆண்டு, ரயில் இன்ஜின், இஐஆர்-21,


சென்னை : உலகின் பழமையான ரயில் இன்ஜின் 'இஐஆர்-21'. இங்கிலாந்து நாட்டில், 1855ல் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் இன்ஜின் 167 ஆண்டுகள் பழமையானது.ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1909ம் ஆண்டு வரை இந்தியாவில் இது ஓடியது.பின்னர், பீஹார் மாநிலம் ஜமால்பூர், மேற்கு வங்க மாநிலம் ஹவுரா ரயில் நிலையங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன.
உலகில், பயன்பாட்டில் இருக்கும் மிகப் பழமையான ரயில் இன்ஜினான இது, தற்போது சென்னை பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் மட்டும் இயக்கப்படுகிறது

.இந்நிலையில், நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய ரயில்வேயின் பாரம்பரியத்தை நினைவுகூரும் விதமாக, சென்னை எழும்பூரிலிருந்து கோடம்பாக்கம் வரை, இந்த நீராவி இன்ஜின் ரயில் நேற்று இயக்கப்பட்டது.

தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா இதை கொடியசைத்து துவங்கி வைத்தார்.எழும்பூரில் இருந்து நீராவி புகை கக்கியபடி ஹாரன் ஒலித்தபடி புறப்பட்டவுடன், அங்கிருந்து சிறுவர்கள், பயணியர், ரயில்வே பணியாளர்கள் என பலரும், கைதட்டி உற்சாகமடைந்தனர்.புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து மகிழ்ந்தனர். நீராவி ரயில் இன்ஜின் இயக்கத்தில், பயிற்சி பெற்ற ரயில் ஓட்டுனர் பூபதி இயக்கினார். இது குறித்து, தெற்கு ரயில்வே இயந்திர பிரிவு பொறியாளர் அசோக்குமார் கூறியதாவது:

இந்திய ரயில்வேயின் வரலாற்றை இளைய சமுதாயத்தினர் தெரிந்து கொள்ளும் வகையில், சிறப்பு ஏற்பாடு செய்து இயக்கப்படுகிறது.இந்த இன்ஜின் தற்போது, மணிக்கு 25 கி.மீ., வேகம் மட்டுமே செல்லும். எழும்பூரில் இருந்து கோடம்பாக்கத்திற்கு, 5.6 கி.மீ., துாரத்தை 15 நிமிடங்களில் கடந்தது. எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே நேற்று இருமுறை இயக்கப்பட்டது. இதில், 200 பேர் பயணம் செய்து மகிழ்ந்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:இந்த பாரம்பரியமிக்க ரயிலில், பயணியரும் பயணிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. முன்பெல்லாம், பொதுமக்களும் பயணிக்க அனுமதி இருந்தது.இதற்காக, கட்டணமும் வசூலிக்கப்பட்டது. தற்போது, இந்த நீராவி ரயிலில் பயணிக்க அனுமதிக்காதது, பயணியர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
16-ஆக-202212:10:12 IST Report Abuse
JeevaKiran பாரம்பரியம் மிக்க இந்த ரயிலை பொதுமக்களும் பயணிக்க அனுமதி அளித்து எழும்பூரிலிருந்து தாம்பரம் வரை இயக்கினால் நன்றாக இருக்கும். பொதுமக்களும்/வழியிலுள்ள ஜனங்களும் கண்டு ரசிப்பார்கள்.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
16-ஆக-202207:15:56 IST Report Abuse
சீனி கூ.... ஜிக்கு... ஜிக்குன்னு போகும் கரிவண்டி நீராவி, மற்றும் நிலக்கரி புகை வாசனை சுகம் தனிதான். அப்பல்லாம் 11மணிக்கு ஒன்னும், 3 மணிக்கு ஒன்னும் திரும்பவரும். புல் முளைத்த ரயில்வே பாதையில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவது மகிழ்ச்சி தரும். தற்போது மை அடித்து அசுத்தமாகி, காலம் மாறிவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X