விடுமுறைநாளில் திணறும் கொடைக்கானல்

Added : ஆக 16, 2022 | |
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானலில் தொடர் விடுமுறை, சீசன் நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு இதுவரை தீர்வு எட்டப்படாத நிலை நீடிக்கிறது.சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை, பூங்காக்கள் ,ஏரி என பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கும் பயணிகள் நீடிக்கும் போக்குவரத்து நெரிசலால்
கொடைக்கானல் சுற்றுலா, விடுமுறை, போக்குவரத்து நெரிசல், Kodaikanal Tourism, Traffic Jam,


கொடைக்கானல் : கொடைக்கானலில் தொடர் விடுமுறை, சீசன் நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு இதுவரை தீர்வு எட்டப்படாத நிலை நீடிக்கிறது.சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை, பூங்காக்கள் ,ஏரி என பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கும் பயணிகள் நீடிக்கும் போக்குவரத்து நெரிசலால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

ரோட்டோர ஆக்கிரமிப்பு , காலாவதி வாகனங்கள் நிறுத்தும் போக்கு என நகர் பகுதி முழுவதும் அவலம் நீடிக்கிறது. சீசன் தருணங்களில் பெயரளவிற்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்ட போதும் இதுவரை தீர்வு கிடைத்ததாக தெரியவில்லை. இடியாப்ப சிக்கலில் சிக்கி கொள்ளும் பயணிகள் முகம் சுளிக்கின்றனர். பெருமாள்மலையில் இருந்து நகர் பகுதியை வந்தடைய சீசன்,விடுமுறை தினங்களில் வாகனங்கள் குறைந்தது 3 மணி நேரம் செலவழிக்க வேண்டியதுள்ளது. இதனால் வாகனங்களில் எரிபொருள் தேவை, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதை தவிர்க்க நகரில் மல்டிலெவல் கார் பார்க்கிங் வசதியை ஏற்படுத்த பல ஆண்டுகளாக திட்டங்கள் தயார் செய்த போதும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.

மாறாக இங்குள்ள உணவகங்கள் ,தங்கும் விடுதிகளில் பயணிகளின் வாகனம் நிறுத்துவதற்கான வாகனம் நிறுத்தம் என்பது அறவே இல்லை. நகராட்சியும் தனியார் கார் பார்க்கிங் வசதியை ஏற்படுத்த முன் வந்த போதும் யாரும் இதை செயல்படுத்தவில்லை. காலம் ,காலமாக தொடரும் போக்குவரத்து நெரிசலால் கொடைக்கானலில் இன்ப சுற்றுலா வருகை தருவோர் தங்கள் மன துயரங்களை கொட்டி குவிக்கும் சூழலே உள்ளது. இதற்கு மாற்று திட்டங்களை அதிகாரிகள் யோசித்தபோதும் அவை பயன்பாட்டிற்கு வராத நிலையே உள்ளது. வத்தலக்குண்டு, பழநி, அடுக்கம், தாண்டிக்குடி என 4 வழித்தடங்களில் வரும் வாகனங்கள் பெருமாள்மலையில் சங்கமித்து 12 கி.மீ., வெள்ளி நீர்வீழ்ச்சி வழியாக கொடைக்கானலை வந்தடையும் போது தான் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


பணிகளுக்கு செல்வதே சவால்


அசோகன், பாரதிய கிசான் சங்க தலைவர், கொடைக்கானல்: வார விடுமுறை , சீசன் தருணங்களில் கொடைக்கானலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் இங்கு வசிக்கும் மக்கள் தங்களது அன்றாட பணிகளுக்கு நகர் பகுதியில் வாகனங்களில் வந்து செல்வது என்பது சவாலாக உள்ளது.விபத்து , அவசரகால சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட சென்று வர முடியாத நிலையும், விவசாய விளை பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்ல முடியாத அவலம் உள்ளது. இப் பிரச்னையை தீர்க்க மாற்று வழியான வில்பட்டி ரோட்டை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


நடவடிக்கை எடுங்க


விவேகானந்தன், விவசாயி, மன்னவனுார் : தொடர் விடுமுறை , சீசன் தருணங்களில் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனுார் , பூண்டி, கிளாவரை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பொது போக்குவரத்து செல்ல முடியாத நிலை உள்ளது. இங்குள்ள சுற்றுலா தல பகுதிகளிலும் வாகன நிறுத்தங்கள் ஏற்படுத்தப்படாத நிலையில் பல மணி நேர போக்குவரத்து பாதிப்பால் இங்குள்ளோர் பாதிக்கும் அவலம் உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் வாகன நிறுத்தம் ,ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X