சர்வதேச காற்றாடி திருவிழா நிறைவு

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | |
Advertisement
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், சர்வதேச காற்றாடி திருவிழா இறுதி நாளில், பயணியர் கூட்டம் அலைமோதியது.மாமல்லபுரம், சர்வதேச பாரம்பரிய சுற்றுலா இடமாக விளங்குகிறது. இங்குள்ள பல்லவர் கால கலைச்சிற்பங்களை, உள்நாடு, சர்வதேச பயணியர் கண்டு ரசிக்கின்றனர். கொரோனா தொற்றால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, சுற்றுலா துறை பாதிக்கப்பட்டுள்ள சூழலில், முன்னேற்றம் கருதி, இத்துறை நிர்வாகம்,

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், சர்வதேச காற்றாடி திருவிழா இறுதி நாளில், பயணியர் கூட்டம் அலைமோதியது.

மாமல்லபுரம், சர்வதேச பாரம்பரிய சுற்றுலா இடமாக விளங்குகிறது. இங்குள்ள பல்லவர் கால கலைச்சிற்பங்களை, உள்நாடு, சர்வதேச பயணியர் கண்டு ரசிக்கின்றனர். கொரோனா தொற்றால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, சுற்றுலா துறை பாதிக்கப்பட்டுள்ள சூழலில், முன்னேற்றம் கருதி, இத்துறை நிர்வாகம், முயற்சிகள் மேற்கொண்டு உள்ளது.
இத்துறை மற்றும் மீடியா பாக்ஸ் என்ற தனியார் நிறுவனம் இணைந்து, தமிழகத்தில் முதல் முறையாக, சர்வதேச காற்றாடி திருவிழாவை நடத்தியது. மாமல்லபுரத்தில், ஆக., 13 - 15ல், இவ்விழா நடத்தப்பட்டது.



latest tamil news




இந்தியாவின், தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, புதுடில்லி, குஜராத் ஆகிய மாநிலங்கள், அமெரிக்கா, தாய்லாந்து ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்த 10 குழுவினர், 80க்கும் மேற்பட்ட காற்றாடிகளை, கடந்த மூன்று நாட்களாக பறக்கவிட்டனர்.

பகல் 12:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை, கடலோர வான் பகுதியில், வசீகர வண்ண காற்றாடிகள், காற்றில் அங்குமிங்கும் அசைந்தாடி பறந்தன. திருவள்ளுவர், விநாயகர், சூப்பர்மேன், யானை, குதிரை, கார்ட்டூன் உருவங்கள் உள்ளிட்ட ஏராளமான வடிவங்களில், சிறியதாகவும், பெரியதாகவும் பறந்து, பார்வையாளர்களை கவர்ந்தன.

வர்ணஜாலமாக ஓவியமாக காட்சியளித்து, சிறுவர், பெரியவர் கண்டு குதுாகலித்தனர். இரவில் இசை நிகழ்ச்சியை ரசித்தனர். உணவு, திண்பண்டங்கள் கடைகளிலும், சிறுவர் பொழுதுபோக்கு விளையாட்டுகளிலும், கூட்டம் அலை மோதியது.இறுதி நாளான நேற்றுடன், 25,000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டதாக, விழா ஏற்பாட்டாளர் தெரிவித்தனர். சிற்பங்களை ரசிக்க, மாமல்லபுரம் வரும் பயணியருக்கு, காற்றாடி திருவிழா, வித்தியாசமான, மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X