தெற்கு ரயில்வே வருவாய் உயர்வு; பொது மேலாளர் மால்யா தகவல்

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை-''கடந்த நான்கு மாதங்களில், மொத்தம் 3,154 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது,'' என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா தெரிவித்தார்.சென்னை பெரம்பூர் விளையாட்டு திடலில், நேற்று நடந்த 75வது சுதந்திர தின விழாவில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா, தேசியக் கொடி ஏற்றி வைத்து, ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-''கடந்த நான்கு மாதங்களில், மொத்தம் 3,154 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது,'' என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா தெரிவித்தார்.



latest tamil news



சென்னை பெரம்பூர் விளையாட்டு திடலில், நேற்று நடந்த 75வது சுதந்திர தின விழாவில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா, தேசியக் கொடி ஏற்றி வைத்து, ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின், பி.ஜி.மால்யா பேசியதாவது: பயணியருக்கான சேவைகள், சரக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதில், ரயில்வே துறை தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2021 - 22ல் தெற்கு ரயில்வேக்கு 7,093 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் இதுவரை, 3,154 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிஉள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில், இது 78 சதவீதம் அதிகம். ரயில்களை தாமதம் இன்றி இயக்குவதில், தெற்கு ரயில்வே தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தெற்கு ரயில்வேயில் முக்கிய ரயில் பாதைகளில் வேகம் அதிகரிப்பு, வேகக் கட்டுப்பாடுகளை நீக்குவது, பணியாளர்கள் இல்லாத 'லெவல் கிராசிங்' மற்றும் ரயில் வழித்தட மேம்பாலங்களில், 'எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் சிஸ்டம்' பொருத்தும் பணியில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news



சென்னை கோயம்பேடில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில், அதன் நிர்வாக இயக்குனர் சித்திக், தேசியக் கொடி ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 52 பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இயக்குனர்கள் ராஜேஷ் சதுர்வேதி, டி.அர்ச்சுனன், பிரசன்னா குமார் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
16-ஆக-202219:49:33 IST Report Abuse
r.sundaram முதியோருக்கான சலுகைகளை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
16-ஆக-202219:18:46 IST Report Abuse
M  Ramachandran ....
Rate this:
Cancel
16-ஆக-202210:34:00 IST Report Abuse
ஆரூர் ரங் சலுகை? இப்போது கூட பயணிகள் ரயில் சேவைக்கு ஆகும் செலவில் 54 சதவீதம் மட்டுமே டிக்கட் விற்பனையில் கிடைக்கிறது. சீசன் டிக்கெட், இலவச பாஸ் போன்றவற்றால் கடும் நஷ்டம்( 46 சதவீதம் நஷ்டம்). இதனை ஓரளவு ஈடுகட்ட சரக்குக் கட்டணத்தை உயர்த்தி வைத்துள்ளனர். இதனால் வணிகர்கள் லாரி போக்குவரத்துக்கு மாறி விடுகின்றனர். பாதுகாப்பு மேம்பாடு போன்ற நவீன மயமாக்கலுக்கு தேவைப்படும் பல்லாயிரக்கணக்கான கோடி நம் வரிப்பணத்திலிருந்து போடப் படுகிறது. ஆண்டுக்காண்டு பென்ஷன் செலவு கிடுகிடுவென உயர்வு. ஆகவே இயன்றவரை IRCTC தனியார்மயமாக்குவது தவிர்க்கமுடியாதது . அரசு வணிகம்😪 செய்தால் மக்கள் பிச்சையெடுப்பர்.
Rate this:
RAVIKUMAR - chennai,இந்தியா
16-ஆக-202211:53:57 IST Report Abuse
RAVIKUMARமொதல்ல வடக்கன்ஸ் டிக்கெட் வாங்கிட்டு பயணிக்க சொல்லுங்க ...பொது டிக்கெட் எடுத்துட்டு ரெசெர்வஷன்ல பயணிக்க கூடாதுனு சொல்லுங்க ...இந்தமாதிரி அட்டூழியம் எல்லாம் ஆந்திரா தாண்டியவுடன் ஆரம்பிக்கும் ..கால கொடும .தமிழ் நாட்டுல இதுபோன்ற விதி மீறல்கள் குறைவு ...இங்கத்திய லாபத்தையெல்லாம் எடுத்து வடக்கன்ஸ் க்கு வித விதமா ரயில் விட்டா நஷ்டம்தான் வரும் ......
Rate this:
CBE CTZN - Coimbatore,இந்தியா
16-ஆக-202213:36:22 IST Report Abuse
CBE CTZNநாம் கொடுக்கும் வருவாயில்தான் வடக்க கிழக்கன்னு வளருது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X