சுதந்திர தின விழாவில் தேசிய கொடி ஏற்றி மக்கள்; 233 பேருக்கு விருது

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | |
Advertisement
திருவள்ளூர் மாவட்டம் முழுதும், நாட்டின் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா உற்சாகமாக நேற்று கொண்டாடப்பட்டது. திருவள்ளூரில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார். காவல் மற்றும் வருவாய் உள்ளிட்ட அரசு துறையைச் சேர்ந்த 233 பேர் பதக்கம், விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலக
 75வது சுதந்திர தின விழா , தேசிய கொடி,திருவள்ளூர் , 75th Independence Day Celebration, Thesiya kodi, Thiruvallur,


திருவள்ளூர் மாவட்டம் முழுதும், நாட்டின் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா உற்சாகமாக நேற்று கொண்டாடப்பட்டது. திருவள்ளூரில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார். காவல் மற்றும் வருவாய் உள்ளிட்ட அரசு துறையைச் சேர்ந்த 233 பேர் பதக்கம், விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தின விழாவையொட்டி, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, மூவர்ண பலுான் மற்றும் சமாதான புறாக்களை பறக்க விட்டு, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.தொடர்ந்து, பல்வேறு துறை சார்பில், 30 பயனாளிகளுக்கு, 1.24 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.latest tamil newsமேலும் சிறப்பாக பணிபுரிந்த, காவல், வருவாய் உள்ளிட்ட அரசு துறையினர் 233 பேருக்கு பதக்கம், விருது மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.மாவட்ட தொழில் மையம் சார்பாக, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியமாக, 7 பேருக்கு 5.40 லட்சம் ரூபாய்; தாட்கோ சார்பில் 4 பேருக்கு தொழில் துவங்க மானியமாக, 12.61 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.கூட்டுறவுத் துறை சார்பில் இரண்டு பயனாளிகளுக்கு பயிர் கடனாக, 1.45 லட்சம் ரூபாய்; மீன்வளத் துறையில் மீன் வியாபாரம் செய்ய விவசாய கடன் அட்டையின் வாயிலாக, 12.61 லட்சம் ரூபாய். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மூன்று பயனாளிகளுக்கு வங்கி கடனாக, 80 லட்சம் ரூபாய் உட்பட பல்வேறு துறைகள் சார்பில், மொத்தம் 30 பயனாளிகளுக்கு, 1 கோடியே 24 லட்சத்து 81 ஆயிரத்து 804 ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவியினை கலெக்டர் வழங்கினார்.

பள்ளி மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. இவர்களை பாராட்டி, பரிசுகளை கலெக்டர் வழங்கினார். விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீபாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், சப் - கலெக்டர் மகாபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


கொண்டாட்டம்


திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி செல்வசுந்தரி, கோட்டாட்சியர் அலுவலகத்தில் சப் - கலெக்டர் மகாபாரதி, நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர்.திருவள்ளூர் பாரதி மெட்ரிக் பள்ளியில், தாளாளர் பார்த்தசாரதி தேசிய கொடி ஏற்றினார். முதல்வர் சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பெருமாள்பட்டு ஊராட்சிக்குட்பட்ட முல்லை நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.


சமபந்தி விருந்து


திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, மதியம் 12:30 மணிக்கு மூலவர், ஆபத்சகாய விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வானை, துர்க்கையம்மன் மற்றும் உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து, சமபந்தி விருந்து நிகழ்ச்சி மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் நடந்தது. இதில், துணை ஆணையர் விஜயா, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஹஸ்சரத்பேகம் பங்கேற்றனர். இதில், 2,500 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. திருத்தணியில் டி.எஸ்.பி., விக்னேஷ், தாசில்தார் வெண்ணிலா ஆகியோர் தேசிய கொடி ஏற்றி வைத்தனர்.திருத்தணி தளபதி மேல்நிலைப் பள்ளி மற்றும் மகளிர் கல்லுாரியில், டி.எஸ்.பி., விக்னேஷ் தேசிய கொடியேற்றி வைத்தார். இதில் கல்லுாரி மற்றும் பள்ளி தாளாளர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருத்தணி சுதந்திரா பள்ளியில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை முன்னாள் பேராசிரியர் ரகுமான் பங்கேற்றார்.திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சார்பு நீதிமன்ற நீதிபதி காயத்திரிதேவி, திருத்தணி நகராட்சி தலைவர் சரஸ்வதி தேசிய கொடி ஏற்றினர். ஆணையர் ராமஜெயம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


ஆர்.கே.பேட்டை


ஆர்.கே.பேட்டை அடுத்த பாலாபரம் அரசு தொடக்க பள்ளியில் மாணவர்கள், தேச பக்தி பாடல்களுக்கு நடனம் ஆடினர். பேச்சு, பாட்டு போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன.


கடம்பத்துார்


கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் சுஜாதா தேசியக் கொடியேற்றினார்; 43 ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் ஊராட்சி தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றினர்.


அரசு உத்தரவு மீறல்


கடம்பத்துார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி உட்பட சில பள்ளிகள் முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவை காற்றில் பறக்கவிட்டு ஊராட்சி மன்ற தலைவர் வருகைக்காக காத்திருந்த பின் தேசியக் கொடி ஏற்றினர். மாணவ - மாணவியர் வெயிலில் காத்திருந்தது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


ஊத்துக்கோட்டை


ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில், நீதிபதி செந்தமிழ்செல்வன் கொடியேற்றினார். வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் ரமேஷ், டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., சாரதி, பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் அப்துல்ரஷீத், எல்லாபுரம், பூண்டி ஒன்றிய அலுவலகங்களில் தலைவர்கள் ரமேஷ், வெங்கட்ரமணா தேசிய கொடி ஏற்றினர்.ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஆய்வாளர் ஏழுமலை, ஊத்துக்கோட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் லோகநாதன் ஆகியோர் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.


கும்மிடிப்பூண்டி


கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., அலுவலகத்தில், பி.டி.ஓ., வாசுதேவன், துணை சேர்மன் மாலதி முன்னிலையில், சேர்மன் சிவகுமார் தேசிய கொடி ஏற்றினார்.கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில், தலைவர் சகிலா, டி.எஸ்.பி., முகாம் அலுவலகத்தில் டி.எஸ்.பி., கிரியாசக்தி, தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் கண்ணன். மாநில நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில், உதவி கோட்ட பொறியாளர் ஆண்டி, ஆகியோர் கொடி ஏற்றினர்.ஈகுவார்பாளையம் கிராமத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜன் தலைமையில் நடந்த சுதந்திர தின விழாவில், ராணுவத்தில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த்தின் தந்தை வரதராஜன் தேசிய கொடி ஏற்றினார்.


பொன்னேரி


பொன்னேரி வருவாய் கோட்ட அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., காயத்ரி, வட்டாட்சியர் அலுவலத்தில், தாசில்தார் ரஜினிகாந்த், மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில், சேர்மன் ரவி, அத்திப்பட்டு ஊராட்சியில் தலைவர் சுகந்தி ஆகியோர் தேசிய கொடியே ஏற்றினர்.ஆட்டோ, சிறு லாரிகள் என வாகனங்களிலும், ஆர்வமுடன் தேசிய கொடிகளை கட்டி வைத்திருந்தனர். பள்ளிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மீனவர்கள் படகுகளில் தேசிய கொடியை கட்டி பறக்கவிட்டபடி தொழிலுக்கு சென்றனர்.


எம்.எல்.ஏ., அலுவலகம்


திருத்தணி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் சுதந்திர தின விழாவையொட்டி, அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி வைத்து கொண்டாடினர்.ஆனால், திருத்தணி ம.பொ.சி., சாலையில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றாமல், அலுவலகம் பூட்டியே இருந்தது. இதனால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X