விருதுநகரில் ஓங்கி ஒலித்தஹர் கர் திரங்கா: கிராமம் முழுவதும் வீடுகளில் பறந்த தேசியக்கொடி| Dinamalar

விருதுநகரில் ஓங்கி ஒலித்த'ஹர் கர் திரங்கா': கிராமம் முழுவதும் வீடுகளில் பறந்த தேசியக்கொடி

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (43) | |
விருதுநகர் : விருதுநகர் அருகே ஆமத்துாரில் உள்ள 2700 வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு 'ஹர் கர் திரங்கா' கிராமம் முழுதும் ஓங்கி ஒலித்தது.75வது சுதந்திர தினத்தை யொட்டி ஒவ்வொருவர் வீட்டிலும் மூவர்ண கொடி என்ற அறிவிப்பை 'ஹர் கர் திரங்கா' என்ற சொல்லை அறிமுகப்படுத்தி பிரதமர் மோடி வெளியிட்டார். ஆக. 13 முதல் 15 வரை நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்கள் முதல்
Virudhunagar,Independence Day,National Flag,விருதுநகர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

விருதுநகர் : விருதுநகர் அருகே ஆமத்துாரில் உள்ள 2700 வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு 'ஹர் கர் திரங்கா' கிராமம் முழுதும் ஓங்கி ஒலித்தது.



75வது சுதந்திர தினத்தை யொட்டி ஒவ்வொருவர் வீட்டிலும் மூவர்ண கொடி என்ற அறிவிப்பை 'ஹர் கர் திரங்கா' என்ற சொல்லை அறிமுகப்படுத்தி பிரதமர் மோடி வெளியிட்டார். ஆக. 13 முதல் 15 வரை நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை வீடுகளில் கொடிகள் பறந்தன.



சுதந்திர நாளான நேற்று ஆமத்துார் ஊராட்சியில் கூரை வீடு, ஓட்டு வீடு, காரை வீடு என எந்த வித்தியாசமும் இன்றி 2700 வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதன் உட்கடை கிராமங்களான நாட்டார் மங்கலம், அம்மன் கோவில்பட்டியும் அடங்கும்.


latest tamil news



ஊராட்சி தலைவர் குறிஞ்சி கூறியதாவது: முழுக்க முழுக்க இளைஞர்களின் ஒத்துழைப்பில் இது சாத்தியமானது. அனைவரது வீட்டிற்கும் சென்று நாட்டு பற்றையும், சுதந்திர தினத்தின் மாண்பையும் எடுத்து கூறி 'ஹர் கர் திரங்காவின்' முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இதன் மூலம் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுவது சாத்தியமானது., என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X