மீண்டும் 'மெடிக்ளைம்' பாலிசி: தயாராகிறது எல்.ஐ.சி.,

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனம், மீண்டும் 'மெடிக்ளைம்' பிரிவில் நுழைவதற்கு தயாராக இருப்பதாகவும்; கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அதன் தலைவர் எம்.ஆர்.குமார் கூறியுள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், மீண்டும் மெடிக்ளைம் பாலிசிகள் வழங்குவது குறித்து, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு
எல்ஐசி மெடிக்ளைம் பாலிசி, எல்ஐசி, LIC, lic mediclaim policy, LIC Health Insurance,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனம், மீண்டும் 'மெடிக்ளைம்' பிரிவில் நுழைவதற்கு தயாராக இருப்பதாகவும்; கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அதன் தலைவர் எம்.ஆர்.குமார் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், மீண்டும் மெடிக்ளைம் பாலிசிகள் வழங்குவது குறித்து, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அண்மையில் தெரிவித்துள்ளது குறித்து ஆலோசித்து வருகிறோம். நாங்கள் ஏற்கனவே மெடிக்ளைம் பிரிவில் செயல்பட்டு வந்துள்ளோம். அது குறித்த அனுபவம் எங்களுக்கு உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


latest tamil news



உடல்நலக் காப்பீட்டில், இழப்பீடுகளை வழங்கும் வகையிலான மெடிக்கிளைம் பாலிசிகள் தான், மிக அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.இருப்பினும், கடந்த 2016ல், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிடம், மெடிக்ளைம் திட்டங்களை சந்தையிலிருந்து திரும்பப் பெறுமாறு, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., கேட்டுக் கொண்டது. அண்மையில், அனைத்து குடிமக்களுக்கும் வரும் 2030ம் ஆண்டுக்குள் மெடிக்ளைம் பாலிசி வழங்கப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் மெடிக்ளைம் பிரிவில் மீண்டும் செயல்படுவதற்கான நேரம் வந்துள்ளதாக, ஐ.ஆர்.டி.ஏ.ஐ. தலைவர் தேபஷிஷ் பாண்டா கூறியுள்ளார்.

இருப்பினும், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், மெடிக்ளைம் பிரிவில் மீண்டும் செயல்படுவது குறித்த இறுதி முடிவுகள் எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.நாட்டில் தற்போது 24.50 லட்சம் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் உள்ளனர். ஆனால், பொது காப்பீட்டில், 3.60 லட்சம் முகவர்கள் மட்டுமே உள்ளனர்.இந்நிலையில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும், உடல்நல காப்பீட்டு திட்டங் களை விற்பனை செய்ய அனுமதிக்கும்பட்சத்தில், அரசு அதன் இலக்கை எளிதாக அடைய முடியும் என கருதப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthikeyan - Trichy,இந்தியா
16-ஆக-202220:15:03 IST Report Abuse
Karthikeyan ....
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16-ஆக-202217:33:44 IST Report Abuse
Ramesh Sargam எப்படி நாட்டில் உள்ள அனைவரும் 'ஆதார்' அட்டை வைத்திருக்கவேண்டும் என்று ஒரு சட்டம் இருக்கிறதோ, அதேபோன்று நாட்டில் உள்ள அனைத்து மக்களும் medical insurance எடுக்கவேண்டும் என்று ஏன் அரசு ஒரு வரைமுறை விதிக்கக்கூடாது?
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
16-ஆக-202213:16:55 IST Report Abuse
N Annamalai நல்ல முயற்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X