13 தங்க சுரங்கங்களை விற்கமத்திய அரசு தீவிரம்

Added : ஆக 16, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
புதுடில்லி : மத்திய அரசு, மொத்தம் 13 தங்க சுரங்கங்களை, வரும் நாட்களில் விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது. இந்த சுரங்கங்கள் ஆந்திர பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளன.ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் பத்து சுரங்கங்கள் ஏலத்தில் விடப்பட உள்ளன. இவற்றில் ஐந்து சுரங்கங்கள், இம்மாதம் 26ம் தேதியன்று ஏலத்தில் விடப்பட உள்ளன.மீதி ஐந்து சுரங்கங்கள், இம்மாதம் 29ம்
 மத்திய அரசு,  தங்க சுரங்கங்கள்,  தங்க சுரங்கம் ஏலம், Gold Mines, Gold Mine Auction,

புதுடில்லி : மத்திய அரசு, மொத்தம் 13 தங்க சுரங்கங்களை, வரும் நாட்களில் விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது. இந்த சுரங்கங்கள் ஆந்திர பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளன.ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் பத்து சுரங்கங்கள் ஏலத்தில் விடப்பட உள்ளன. இவற்றில் ஐந்து சுரங்கங்கள், இம்மாதம் 26ம் தேதியன்று ஏலத்தில் விடப்பட உள்ளன.

மீதி ஐந்து சுரங்கங்கள், இம்மாதம் 29ம் தேதியன்று ஏலம் விட தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த ஏலத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பு, கடந்த மார்ச் மாதத்திலேயே விடப்பட்டு விட்டது.மீதம் உள்ள மூன்று சுரங்கங்களுக்கான ஏலம், எப்போது நடைபெறும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.இந்த மூன்று சுரங்கங்களுக்கான ஏலத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பு கடந்த மே 21ம் தேதியன்று வழங்கப்பட்டது.கடந்த நிதியாண்டில் மட்டும் பல்வேறு தாதுக்களுக்கான மொத்தம் 45 சுரங்கங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raman - madurai ,இந்தியா
16-ஆக-202221:04:54 IST Report Abuse
raman எவ்வளவு ரூபாய்க்கு சராசரியாக தங்கம் கிடைக்கிறது செலவு போக லாபமா நஷ்டமா தெளிவாக அறிவிக்கவும்
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
16-ஆக-202216:19:49 IST Report Abuse
Rafi விற்கவில்லை என்றால் தான் புதிய செய்தியாக மக்களே உணருவார்கள், இப்படி விற்பதால் அவர்கள் கட்சி மக்களிடம் செல்வாக்கு பெறுகிறதோ இல்லையோ, எதிரணியை கவருவதற்கு பேருதவியாக இருப்பதனால் விற்றுக்கொண்டு இருக்கின்றார்கள்.
Rate this:
Cancel
மதுரை கோபி - Madurai ,இந்தியா
16-ஆக-202215:34:54 IST Report Abuse
மதுரை கோபி எவ்வளவோ வித்திட்டோம் இதை விக்க மாட்டோமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X