திராவிட இயக்க பூங்காவில் பூக்கும் மலர்களில் மருத்துவ குணம் இருந்தா மருத்துவமனைகள் எதற்கு?

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் பேச்சு: தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் கார் மீது, செருப்பு வீசும் மோசமான செயலில், பா.ஜ.,வினர் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தை மற்ற மாநிலங்கள் போல, அவர்கள் நினைத்து விட வேண்டாம். இங்கு பகுத்தறிவு அதிகஅளவில் உள்ளது. திராவிட இயக்கத்தில் உள்ள பூங்காவில், மலரும் பூக்களில் மணம் மட்டும் இல்லை; மருத்துவ குணமும் உள்ளது.திராவிட இயக்க பூங்காவில்
மகேஷ், சசிகலா

தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் பேச்சு: தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் கார் மீது, செருப்பு வீசும் மோசமான செயலில், பா.ஜ.,வினர் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தை மற்ற மாநிலங்கள் போல, அவர்கள் நினைத்து விட வேண்டாம். இங்கு பகுத்தறிவு அதிகஅளவில் உள்ளது. திராவிட இயக்கத்தில் உள்ள பூங்காவில், மலரும் பூக்களில் மணம் மட்டும் இல்லை; மருத்துவ குணமும் உள்ளது.

திராவிட இயக்க பூங்காவில் பூக்கும் மலர்களில் மருத்துவ குணம் இருந்தா, பிறகு மருத்துவமனைகள் எல்லாம் எதற்கு...? எல்லாத்தையும் இழுத்து மூடுங்களேன்!


தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: ராசிபுரம் அடுத்த வெண்ணாந்துாரில், இரவு காட்சி பார்க்க சென்ற பெண்ணிடம், போதையில் இருந்த ஐந்து பேர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். கண்டித்த கணவரை தாக்கி உள்ளனர். இதை காவலர்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். அவர்களை பதவி நீக்கம் செய்வதோடு, கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

ஊர் கெட்டு போய் கிடக்குற நேரத்துல, இரவு காட்சியை எல்லாம் தவிர்த்தா நல்லாயிருக்குமே!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை: நீலகிரியில் கனமழை காரணமாக, மசினகுடி - கூடலுார் நெடுஞ்சாலையில் உள்ள தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது; இன்னும் சரி செய்யப்படவில்லை. ஒரு வாரமாக மசினகுடி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


latest tamil newsஇந்த மாதிரி அசம்பாவிதங்கள் நடந்தா உங்க தோழி ஜெயலலிதா, உடனே தன் கட்சியினரை அனுப்பி உதவிகள் செய்ய உத்தரவு போடுவாங்க... நீங்களும், உங்க ஆதரவாளர்கள் வாயிலாக, அவங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கலாமே!


அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: பெண்ணின் கண்களை வர்ணிக்க, ஆயிரக்கணக்கான வார்த்தைகள் தமிழில் உள்ளபோது, 'கஞ்சாப்பூ கண்ணாலே' என்று பாடல் எழுத வேண்டுமா? நாளை கொகைன், அபின் என பல போதைப் பொருட்கள் பெயரில் பாடல் வெளியாகும். எதை ஒழிக்க வேண்டுமோ, அதை அனைவரையும் உச்சரிக்க வைப்பது உகந்தது அல்ல.

சரியா சொன்னீங்க... கதையே இல்லாம கூட படம் எடுத்துடுவாங்க... ஆனா மது குடிக்கிற காட்சிகள் இல்லாம சினிமா எடுக்க மாட்டேங்கிறாங்களே!தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி: மக்களுக்கு அத்தியாவசியமான அரிசி, கோதுமை, பால், தயிர் போன்றவற்றுக்கு, 5 சதவீத ஜி.எஸ்.டி., அமல்படுத்தி உள்ளனர். இதை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டமும் மற்றும் மதுரையில் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடக்கும் நாளன்று, உண்ணாவிரத போராட்டமும் நடத்த உள்ளோம்.

தங்களது உண்ணாவிரத போராட்டம் பலன் அளித்து, வரிகளை வாபஸ் வாங்கினால் நல்லது தான்!புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
16-ஆக-202220:27:18 IST Report Abuse
sankar .....
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
16-ஆக-202219:36:51 IST Report Abuse
r.sundaram ஜி எஸ் டி பெயரை சொல்லி தமிழக அரசு விலை ஏற்றியதை ஏன் இவர்கள் கண்டிக்க வில்லை. தனது மகன் ஆளும் கட்சி எம் எல் ஏ என்பதால், ஆளும் கட்சியை விமரிசிக்க பயப்படுகிறதா இந்த பேரவை? நியமாக பார்த்தால், தனது உறவினர் எம் எல் ஏ ஆனால், தான் தலைமை பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் அல்லவா? நியாயம், நேர்மை ........ஆஹ்ஹா ஆஹ்ஹா......
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
16-ஆக-202216:56:04 IST Report Abuse
sankaseshan காகிதப்பூமனக்காது காங்கிரஸ் சோசலிசம் இனிக்காது சொன்னவர் அண்ணாதுரை அவர் வழிவந்த கல்வி அமைச்சர் சொல்லறாரு திராவிட மாடல் அரசு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X