மாநில அரசு விதை பண்ணையில் நடவு பணியை மண்டல அதிகாரி ஆய்வு

Added : ஆக 16, 2022 | |
Advertisement
குளித்தலை அடுத்த, இனுங்கூர் பஞ்., இனுங்கூரில் மாநில அரசு விதைபண்ணையில், வேளாண்மை வளர்ச்சி திட்ட மண்டல அதிகாரி பிரின்ஸ் கிளமெண்ட், ஆய்வு செய்தார்.மேலும், இந்த பண்ணையில் நடவு செய்யப்பட்டுள்ள ஏ.டி.டி., 54, சி.ஆர்., 1009 ஆகிய ரகங்களையும், 10 ஆயிரம் தென்னை நாற்றுகளையும் பார்வையிட்டார்.மேலும், இனுங்கூர் காகம்பட்டியில் கலைஞர் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு நில

குளித்தலை அடுத்த, இனுங்கூர் பஞ்., இனுங்கூரில் மாநில அரசு விதைபண்ணையில், வேளாண்மை வளர்ச்சி திட்ட மண்டல அதிகாரி பிரின்ஸ் கிளமெண்ட், ஆய்வு செய்தார்.
மேலும், இந்த பண்ணையில் நடவு செய்யப்பட்டுள்ள ஏ.டி.டி., 54, சி.ஆர்., 1009 ஆகிய ரகங்களையும், 10 ஆயிரம் தென்னை நாற்றுகளையும் பார்வையிட்டார்.
மேலும், இனுங்கூர் காகம்பட்டியில் கலைஞர் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு நில தொகுப்பு, ஆழ்துளை கிணறு, பண்ணைக்குட்டை ஆகியவற்றை பார்வையிட்டார். தரிசு நில தொகுப்பில் உள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது, கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமத்தில், 200 விவசாயிகளுக்கு தலா, 3 தென்னங்கன்றுகள் வீதம், 600 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
மேலும், 5 விவசாயிகளுக்கு கைத்தெளிப்பான், 5 விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான் ஆகியவை வழங்கப்பட்டன.
அவர் விவசாயிகளிடம் பேசியதாவது:
தரிசு நிலத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றி, வேளாண் துறை மூலம் வழங்கப்படும், 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து, விதைகள் பெற்று காய்கறி சாகுபடி செய்ய வேண்டும். அந்த காய்கறிகளை உழவர் சந்தையில் விற்பனை செய்து, நிறைந்த லாபம் பெற்றிட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, குளித்தலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, கரூர் வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி, வேளாண்மை துணை இயக்குனர் பாலகிருஷ்ணன், குளித்தலை வேளாண்மை உதவி இயக்குனர் அரவிந்தன் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X