தமிழக இன்ஜி., தரவரிசை பட்டியல் வெளியீடு: கேரளாவில் பயின்ற மாணவி முதலிடம்

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
சென்னை : தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கான தரவரிசை பட்டியல், இன்று (ஆக.,16) வெளியானது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, உயர் கல்வித் துறை சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த
Engineering, Rank List, Counselling, இன்ஜினியரிங், தரவரிசை பட்டியல், கவுன்சிலிங், வெளியீடு, பொன்முடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கான தரவரிசை பட்டியல், இன்று (ஆக.,16) வெளியானது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, உயர் கல்வித் துறை சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க விண்ணப்பித்த மாணவர்களில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்களது தரவரிசை நிலையை www.tneaonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


latest tamil newsபட்டியலை வெளியிட்டு அமைச்சர் பொன்முடி கூறியதாவது: அனைத்து பிரிவுகளிலும் சென்ற ஆண்டை விட இந்தாண்டு விண்ணப்பங்கள் அதிகமாக கிடைத்துள்ளன. இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு இந்தாண்டு 2,11,905 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்தாண்டை விட 36,975 அதிகமாகும். இந்தாண்டு 1,69,080 பேர் பதிவு கட்டணம் செலுத்தியுள்ளனர். இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல்-2022ல் இன்று 1,58,157 மாணவர்களுக்கான தரவரிசை வெளியிடப்படுகிறது. இதில் 7.5 சதவீத இடஒதுக்கீடின் கீழ் 22,587 பேருக்கான தரவரிசையும் வெளியிடப்பட்டுள்ளன.


latest tamil news


மொத்தம் 431 இன்ஜி., கல்லூரிகள் இந்த கவுன்சிலிங்கில் கலந்துகொள்கின்றன. மாணவர்கள் விண்ணப்பித்து இருந்து, தரவரிசை பட்டியலில் தங்கள் பெயர் விடுப்பட்டிருந்தாலோ, ஏதேனும் குறை இருந்தாலோ ஆக.,19க்குள் அருகாமையில் உள்ள தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை சேவை மையத்தில் பதிவு செய்யலாம். அவை உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். தரவரிசை பட்டியலில் 200க்கு 200 கட்ஆப் எடுத்த தமிழகத்தை சேர்ந்த ரஞ்சிதா, தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இவர், கேரளாவின் கொல்லம் பகுதியில் உள்ள எஸ்என்எஸ்எம் பள்ளியில் படித்துள்ளார்.


latest tamil news


தர்மபுரி மாவட்டம், அவ்வை எம்ஹெஎஸ் பள்ளியில் படித்த ஹரினிகா 2ம் இடத்தையும், திருவள்ளூர் மாவட்டம், வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் பயின்ற லோகேஷ் கண்ணன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். முதல் பத்து இடங்களை பிடித்த அனைவரும் 200க்கு 200 கட்ஆப் எடுத்துள்ளனர். ஆகஸ்ட் 20 முதல் 23ம் தேதி வரையில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுப் பிரிவு, சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெறும். பொதுப்பிரிவினருக்கு ஆக.,25 முதல் அக்.,21 வரை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
16-ஆக-202219:23:05 IST Report Abuse
Easwar Kamal பொன்மொடி ஒரு சிறப்பான கல்வி அமைச்சர் .
Rate this:
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
16-ஆக-202219:51:37 IST Report Abuse
தியாகு ஹி...ஹி...ஹி...இதை எழுதும்போது உங்களுக்கு சிரிப்பு வரலையா? ஹி...ஹி...ஹி......
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
16-ஆக-202219:12:42 IST Report Abuse
தியாகு செம்மண் திருடர் உயர்கல்வி துறை அமைச்சர். நிலக்கரி மற்றும் சாராய திருடர் மின்துறை அமைச்சர். சுரங்கம் மற்றும் மருத்துவமனை மற்றும் கட்டுமான நிறுவன திருடர் நகரமேம்பாட்டுத்துறை அமைச்சர், கட்டப்பஞ்சாயத்து செய்பவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் பாலைக்கூட திருடுபவர் பால் வளத்துறை அமைச்சர் இன்னும் என்னென்னெ கொடுமைகளோ விடியல் ஆட்சியில்
Rate this:
Cancel
16-ஆக-202217:05:00 IST Report Abuse
ஆரூர் ரங் அதிமுக ஆட்சியில் பல வெளி மாநிலத்தில் படித்த மாணவ மாணவிகளுக்கு மருத்துவ, பொறியியல் இடங்கள் கிடைத்தபோது😛 எதிர்த்து குரல் எழுப்பியது திமுக. இப்போது மலையாளம் மாணவிக்கு முதலிடம் கொடுத்து பட்டியலையும் திமுக அமைச்சரே வெளியிடுகிறார். ஆகமொத்தம் இருவருமே கபட வேடதாரிகள் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X