நயாகரா நீர்வீழ்ச்சி, புர்ஜ் கலீபா, லிபர்ட்டி சிலை, ஈபிள் டவர், லண்டன் டவரில் ஜொலித்த மூவர்ணம்: உலகம் முழுக்க கம்பீரம்

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
புதுடில்லி: இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நயாகரா நீர்வீழ்ச்சி, புர்ஜ் கலீபா கட்டடம், லிபர்ட்டி சிலை, ஈபிள் டவர், லண்டன் டவர் உள்ளிட்டவை , இந்திய தேசிய கொடியின் வண்ணமான மூவர்ண நிறங்களில் ஜொலித்தன.இந்தியாவின் சுதந்திர தின பவள நாடு முழுவதும் நேற்று (ஆக.,15) சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மக்கள்
நயாகரா நீர்வீழ்ச்சி, புர்ஜ் கலீபா,  லிபர்டி சிலை, ஈபிள் டவர், லண்டன் டவர்,மூவர்ணம், உலகம், கம்பீரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நயாகரா நீர்வீழ்ச்சி, புர்ஜ் கலீபா கட்டடம், லிபர்ட்டி சிலை, ஈபிள் டவர், லண்டன் டவர் உள்ளிட்டவை , இந்திய தேசிய கொடியின் வண்ணமான மூவர்ண நிறங்களில் ஜொலித்தன.

இந்தியாவின் சுதந்திர தின பவள நாடு முழுவதும் நேற்று (ஆக.,15) சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மக்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வைத்து தங்களது நாட்டு பற்றை வெளிப்படுத்தினர்.

அதேபோல் உலகம் முழுவதும் நமது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்தன. அதன் ஒரு பகுதியாக,

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும் ஐக்கிய அமெரிக்காவின் நியுயார்க் இடையேயான எல்லையில் அமைந்துள்ள நயாகரா நீர்வீழ்ச்சி,
அமெரிக்காவின் 'தி எம்பயர் ஸ்டேட்' கட்டடம்,
சுவிட்சர்லாந்தின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான மேட்டர்ஹார்ன் மலைச் சிகரம்
அமெரிக்காவின் 'லிபர்டி' சிலை
மலேஷியாவில் உள்ள டுவின் டவர்ஸ்,
இத்தாலியின் பைசா கோபுரம்
நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கம்


latest tamil news


நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையம்
இங்கிலாந்தில் உள்ள லண்டன் டவர்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவர்
கோல்கட்டாவில் உள்ள 'தி 42 டவர்'
இந்தியா பெங்களூரு நகரம்
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம். ஆகியவற்றில் மூவர்ண கொடியை, ஒளி வெள்ளத்தில் ஒளிர வைத்தனர். அவை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
16-ஆக-202219:44:33 IST Report Abuse
r.sundaram இற்று ஆகஸ்ட் பந்தினைந்து அன்று உலகம் பூராவும் இருக்கும் இந்தியர்கள் தங்களது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறார்கள். ஆனால் பாகிஸ்தான்? அதற்க்கு ஆகஸ்ட் பதினான்காம் தியதி சுதந்திர தினம், அனால் அது தனது சுதந்திர தினத்தை கொண்டாடியதாக தகவலே இல்லையே.
Rate this:
Cancel
BALAMURUGAN.E - CHENNAI,இந்தியா
16-ஆக-202216:04:55 IST Report Abuse
BALAMURUGAN.E வாழ்க பாரதம்
Rate this:
Cancel
16-ஆக-202215:23:13 IST Report Abuse
SUBBU,MADURAI ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X