கைதான பா.ஜ., மாநில நிர்வாகிக்கு ஆக., 29 வரை நீதிமன்ற காவல்

Added : ஆக 16, 2022 | |
Advertisement
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில், பா.ஜ., மாநில துணைத்லைவர் ராமலிங்கம், மூன்று நாட்களுக்கு முன், பாரதமாதா கோவில் பூட்டை உடைத்து, சிலைக்கு மாலை அணிவித்தார். இது தொடர்பாக, நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்த பாப்பாரப்பட்டி போலீசார், அதே வேகத்தில், நாமக்கல் மாவட்டம் கோனேரிப்பட்டியில் உள்ள ராமலிங்கம் வீட்டுக்கு சென்று, கைது செய்தனர். பென்னாகரம் அரசு

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில், பா.ஜ., மாநில துணைத்லைவர் ராமலிங்கம், மூன்று நாட்களுக்கு முன், பாரதமாதா கோவில் பூட்டை உடைத்து, சிலைக்கு மாலை அணிவித்தார். இது தொடர்பாக, நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்த பாப்பாரப்பட்டி போலீசார், அதே வேகத்தில், நாமக்கல் மாவட்டம் கோனேரிப்பட்டியில் உள்ள ராமலிங்கம் வீட்டுக்கு சென்று, கைது செய்தனர். பென்னாகரம் அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை நடந்தது. தொடர்ந்து உயர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள, அன்றிரவு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதய துடிப்பு, ஈ.சி.ஜி., உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவில், தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பென்னாகரம் மாஜிஸ்திரேட் பிரவீனா நேற்று மாலை, 6:00 மணியளவில் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவர்களிடம் ராமலிங்கம் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். சேலம் சிறை போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார். ஆக., 29 வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X