இந்து முன்னணி தலைவர், நிர்வாகிகள் கைது

Added : ஆக 16, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
திருப்பூர்: இந்து முன்னணி கலை பாண்பாட்டு குழு பிரிவு செயலாளரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல்கண்ணன், ஈ.வெ.ரா குறித்து பேசியது தொடர்பாக, புதுச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டார். கைதுக்கு கண்டனம் தெரிவித்து, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில செயலாளர் கிஷோர் குமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் திருப்பூரில் கைது
இந்து முன்னணி தலைவர், நிர்வாகிகள் கைது

திருப்பூர்: இந்து முன்னணி கலை பாண்பாட்டு குழு பிரிவு செயலாளரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல்கண்ணன், ஈ.வெ.ரா குறித்து பேசியது தொடர்பாக, புதுச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டார். கைதுக்கு கண்டனம் தெரிவித்து, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில செயலாளர் கிஷோர் குமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் திருப்பூரில் கைது செய்யப்பட்டனர்.


பந்தலூரிலும் ஆர்ப்பாட்டம்



பந்தலூரில் இந்து முன்னணி நிர்வாகி முரளி தலைமையில், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக, அந்த அமைப்பினர் கொடியை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். அவர்களை டி.எஸ்.பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர். இதனால் அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஆனால் போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்த விடாமல் வலுக்கட்டாயமாக அனைவரையும் வாகனத்தில் ஏற்றி, தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். போலீசாரின் இந்த செயலை கண்டித்து அமைப்பை சேர்ந்தவர்கள் சாலையின் நடுவே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதில் மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
16-ஆக-202220:16:57 IST Report Abuse
Vena Suna இம் என்றால் வன வாசம்.ஏன் என்றால் சிறை வாசம் என்றான் பாரதி அந்நியர் ஆட்சியை. இது அதை விட மோசமாக இருக்கின்றது . ஈவேரா கடுவுளை வணங்குபவன் முட்டாள் என்று சொல்லியுள்ளதை கோவில் எதிரே போட்டு உள்ளீர்கள். தவறு தானே. அவர் சிலையை வேறு எங்கேயாவது வைக்கலாமே? கனல் கண்ணன் சொல்வதில் என்ன தப்பு.
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
16-ஆக-202220:08:41 IST Report Abuse
mindum vasantham ஓங்கோல் ஹிந்து எதிர்ப்பு அடக்குமுறை
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
16-ஆக-202220:02:27 IST Report Abuse
r.sundaram இதற்க்கெல்லாம் காலம் பதில் சொல்லும். இந்த மாதிரி ஒவ்வொரு செயலிலும் தான் இந்துக்களின் எதிரி என்று இந்த அரசு காணித்துக்கொள்கிறது.. கம்சனும் இப்படித்தான் ஒவ்வொரு செயலிலும் கண்ணனை பார்த்தான், பயந்தான். தனது சவக்குழியை தானே தோண்டிக்கொள்கிறது இந்த அரசு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X