இந்து முன்னணி தலைவர், நிர்வாகிகள் கைது| Dinamalar

இந்து முன்னணி தலைவர், நிர்வாகிகள் கைது

Added : ஆக 16, 2022 | கருத்துகள் (17) | |
திருப்பூர்: இந்து முன்னணி கலை பாண்பாட்டு குழு பிரிவு செயலாளரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல்கண்ணன், ஈ.வெ.ரா குறித்து பேசியது தொடர்பாக, புதுச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டார். கைதுக்கு கண்டனம் தெரிவித்து, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில செயலாளர் கிஷோர் குமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் திருப்பூரில் கைது
இந்து முன்னணி தலைவர், நிர்வாகிகள் கைது

திருப்பூர்: இந்து முன்னணி கலை பாண்பாட்டு குழு பிரிவு செயலாளரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல்கண்ணன், ஈ.வெ.ரா குறித்து பேசியது தொடர்பாக, புதுச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டார். கைதுக்கு கண்டனம் தெரிவித்து, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில செயலாளர் கிஷோர் குமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் திருப்பூரில் கைது செய்யப்பட்டனர்.



பந்தலூரிலும் ஆர்ப்பாட்டம்


பந்தலூரில் இந்து முன்னணி நிர்வாகி முரளி தலைமையில், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக, அந்த அமைப்பினர் கொடியை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். அவர்களை டி.எஸ்.பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர். இதனால் அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஆனால் போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்த விடாமல் வலுக்கட்டாயமாக அனைவரையும் வாகனத்தில் ஏற்றி, தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். போலீசாரின் இந்த செயலை கண்டித்து அமைப்பை சேர்ந்தவர்கள் சாலையின் நடுவே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதில் மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X