பீஹாரில் நிதிஷ் அமைச்சரவை விரிவாக்கம்: 31 பேர் பதவியேற்பு| Dinamalar

பீஹாரில் நிதிஷ் அமைச்சரவை விரிவாக்கம்: 31 பேர் பதவியேற்பு

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (6) | |
பாட்னா: பீஹாரில் நிதிஷ்குமார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. லாலுவின் ஒரு மகன் தேஜஸ்வி துணை முதல்வராக உள்ள நிலையில், மற்றொரு மகன் தேஜ் பிரதாப் அமைச்சராக பதவியேற்று கொண்டார். அமைச்சரவை விரிவாக்கத்தில் 31 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.பா.ஜ., உடனான கூட்டணியை முறித்த ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின்
bihar, cabinet, tejpradap, nitish, tejaswi yadav,

பாட்னா: பீஹாரில் நிதிஷ்குமார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. லாலுவின் ஒரு மகன் தேஜஸ்வி துணை முதல்வராக உள்ள நிலையில், மற்றொரு மகன் தேஜ் பிரதாப் அமைச்சராக பதவியேற்று கொண்டார். அமைச்சரவை விரிவாக்கத்தில் 31 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.பா.ஜ., உடனான கூட்டணியை முறித்த ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்று கொண்டார். துணை முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார்.


latest tamil newsஇந்நிலையில், மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் 31 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் 16 பேரும், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 11 பேரும், காங்கிரஸ் சார்பில் 2, ஜித்தன்ராம் மஞ்சி கட்சி மற்றும் சுயேச்சை சார்பில் தலா ஒருவர் பதவியேற்று கொண்டனர்.latest tamil news


லாலுவின் ஒரு மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக உள்ள நிலையில், அவரது மற்றொரு மகன் தேஜ் பிரதாப் யாதவும் இன்று அமைச்சராக பதவியேற்றார். ஐக்கிய ஜனதா தளத்தின் அலோக் மேதா, சுரேந்திர பிரசாதய யாதவ், ராமனந்த் யாதவ், குமார் சர்வஜீத், சமீர் குமார் மகாசேத் மற்றும் லலித் யாதவ் உள்ளிட்ட 16 பேர் பதவியேற்று கொண்டனர்.ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த அசோக் சவுத்ரி லேஷி சிங், விஜய் குமார் சவுத்ரி, சஞ்சய் ஜா, ஷீலா குமாரி, சுனில் குமார் மதன் சஹ்னி மற்றும் பிஜேந்திர யாதவ் உள்ளிட்ட 11 பேர் பதவியேற்றனர்.காங்கிரசின் அபிக் ஆலம், முராரி லால் கவுதம், மஞ்சி கட்சியின் சந்தோஷ்சுமன் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ சுமித் குமாரும் பதவியேற்று கொண்டனர்.
இலாகா ஒதுக்கீடு


அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதன்படி முதல்வர் நிதிஷ்குமாரிடம் உள்துறை


துணை முதல்வர் தேஜஸ்வி யாதவிடம் சுகாதாரம், சாலை கட்டமைப்பு, நகர்ப்புற வீட்டு வசதி

மற்றும் வளர்ச்சித்துறை, ஊரக வளர்ச்சித்துறை


இவரின் சகோதரர் தேஜ் பிரதாப்பிடம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறையும்விஜய் குமார் சவுத்ரியிடம் நிதி, வணிகவரித்துறை, பார்லிமென்டரி விவகாரம்பிஜேந்திர யாதவிடம் மின்சாரம், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X