நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை

Added : ஆக 16, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
சென்னை: கடந்த 2016-17ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகை விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக ரூ.35.42 கோடி பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி
Actor Vijay, Fine, High Court, Stay Order, IT department

சென்னை: கடந்த 2016-17ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகை விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக ரூ.35.42 கோடி பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது.

வருமானத்தை மறைத்ததற்கான ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஜூன் 30ம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019ம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் என்றும், காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 16க்கு தள்ளிவைத்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-ஆக-202206:16:36 IST Report Abuse
Mani . V ஆமா, அந்த தியாகி தேசியக் கொடியை தன் வீட்டில் ஏற்றினாரே தெரியாதா? இருந்தாலும் இந்தியாவில் சட்டம் அனைவருக்கும் (ஏமாற்றுபவர் உள்பட) சமம் என்று நாம் சும்மா சொல்லிக்கொள்வோம். "........அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019ம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் என்றும், காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை....." சம்பள உயர்வையோ, அகவிலைப்படியையோ முன் தேதியிட்டு வழங்குவது இல்லையா? பத்து வருடம் முன்பு கொலை செய்த ஒருவருக்கு, காலதாமதமாக பிடிப்பட்ட பின்னர் தண்டனை கொடுப்பதில்லையா? இந்த லட்சணத்தில் இவரெல்லாம் தமிழ்நாட்டின் வருங்கால முதல்வராம்.
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
17-ஆக-202203:40:19 IST Report Abuse
John Miller மிகவும் வறுமையில் இருப்பவர். இந்த அபதரத்தை காட்டினாள் சாப்பாட்டிற்கே நடுத்தெருவில் குடும்பத்தோடு நின்று பிட்சை எடுக்க நேரிடும்.
Rate this:
Cancel
seshadri - chennai,இந்தியா
17-ஆக-202201:36:45 IST Report Abuse
seshadri KANAKKIL காட்ட வில்லை என்று ஒப்பு கொள்கிறார். எனில் அது கருப்பு பணம்தான் அப்படியானால் மொத்த பணத்தையும் பறிமுதல் செய்ய வேண்டியதுதானே அதுதானே முறை. பணம் படைத்தவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் நீதி மன்றமும் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X