பள்ளி மாணவ, மாணவி தற்கொலை முயற்சி| Dinamalar

பள்ளி மாணவ, மாணவி தற்கொலை முயற்சி

Added : ஆக 16, 2022 | கருத்துகள் (15) | |
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பள்ளி வளாகங்களில் மாணவ, மாணவியர் ஒரே நேரத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் வடகரையை சேர்ந்த சரவணன் மகள் கார்த்திகா(15) அரசு பெண்கள் பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் அபிமன்யூ (17) திருப்புவனம் காமராசர் மெட்ரிக் பள்ளியில் ப்ளஸ் டூ படித்து
 மாணவி தற்கொலை, திருப்புவனம் பள்ளி, மாணவன் தற்கொலை, Tiruppuvanam School, Student Suicide,

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பள்ளி வளாகங்களில் மாணவ, மாணவியர் ஒரே நேரத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்புவனம் வடகரையை சேர்ந்த சரவணன் மகள் கார்த்திகா(15) அரசு பெண்கள் பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் அபிமன்யூ (17) திருப்புவனம் காமராசர் மெட்ரிக் பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வருகிறார். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இன்று காலை பள்ளிகளுக்கு சென்றவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். மாணவி பள்ளி கழிப்பறையில் ரத்தத்தால் ‛சாரி' அம்மா என எழுதிவிட்டு, பேனாவால் உடலை கீறி விட்டு பள்ளியின 2வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறிது நேரத்தில் காமராசர் பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கும் அபிமன்யூ பள்ளி வகுப்பறையில் பூச்சி மருந்து குடித்து மயங்கினார்.


ஆசிரியர்கள் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒரே சமயத்தில் மாணவ , மாணவியர் தற்கொலைக்கு முயன்றதால் திருப்புவனத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மாவட்ட எஸ்.பி., செந்தில்குமார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X