காஷ்மீரில் பஸ் கவிழ்ந்து 7 ராணுவ வீரர்கள் பலி

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஆற்றின் கரையோரம் பஸ் கவிழ்ந்ததில் இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படை(ஐடிபிபி) வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.ஆனந்த்நாக் மாவட்டத்தில், சந்தன்வாரி என்ற இடத்தில் இருந்து பகல்ஹாம் பகுதிக்கு பஸ் சென்று கொண்டிருந்தது. அதில் ஐடிபிபி வீரர்கள் 37 பேர் மற்றும் இரண்டு காஷ்மீர் போலீசார் பயணித்தனர். சந்தன்வாரி பகுதியில், பஸ் பிரேக் பிடிக்காததால் ஆற்றின்
Border Police, Personnel Kill, Bus, Fall, River, Kashmir,

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஆற்றின் கரையோரம் பஸ் கவிழ்ந்ததில் இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படை(ஐடிபிபி) வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

ஆனந்த்நாக் மாவட்டத்தில், சந்தன்வாரி என்ற இடத்தில் இருந்து பகல்ஹாம் பகுதிக்கு பஸ் சென்று கொண்டிருந்தது. அதில் ஐடிபிபி வீரர்கள் 37 பேர் மற்றும் இரண்டு காஷ்மீர் போலீசார் பயணித்தனர். சந்தன்வாரி பகுதியில், பஸ் பிரேக் பிடிக்காததால் ஆற்றின் கரையோரம் கவிழ்ந்தது. அதில் ஐடிபிபி வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

வீரர்கள் உயிரிழந்ததற்கு பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கவர்னர் மனோஜ் சின்ஹா, நேரில் சென்று, காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.


latest tamil news

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் 19 ஆம்புலன்ஸ்களில் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அருகில் உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டதுடன், டாக்டர்களும் வரவழைக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல் பகல்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16-ஆக-202217:02:50 IST Report Abuse
Ramesh Sargam இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் மனம் வருந்தினேன். நாட்டின் பாதுகாப்புக்காக நாளொறுபொழுதும் பணியில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் மரணிக்கக்கூடாது. மரணித்த அணைத்து வீரர்களின் ஆன்மாவும் சாந்தியடையட்டும்.
Rate this:
Cancel
16-ஆக-202215:14:53 IST Report Abuse
SUBBU,MADURAI எல்லையில் நின்று எல்லைஇல்லா இன்னல்களை அனுபவித்தீர்கள்.இதயத்தை இரும்பாக்கி கொண்டீர்கள்.உங்கள் குடும்பத்தையும் முக்கியமாக உங்களை பெற்றெடுத்த தாயையும் பிரிய மனமில்லாமல் இதயத்தை பலப்படுத்தி கொண்டீர்கள்.எதிரிகளிடமிருந்து உங்கள் தாய் நாட்டை பிரிய விடாமல் காத்தீர்கள்.நீங்காத துன்பத்திலும் துப்பாக்கியை கையில் ஏந்தி நம் எதிரியை அழிக்கும் உண்மையான கடவுள் நீங்கள்தான்.நம் பாரத மண்ணில் நீங்கள் விழ்ந்தாலும் விதையாய் விழுந்து விருட்சமாய் வளர்ந்து மக்களை காக்கும் சக்தி நீங்களே.மரணத்தை கூட முன் பதிவு செய்து கொண்ட வீரர்கள் எங்கள் பாரத தாயின் வீர மகன்களானஇந்த ராணுவ வீரர்களே.அவர்களுக்கு என் "வீர வணக்கம்"ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel
Kavitha -  ( Posted via: Dinamalar Android App )
16-ஆக-202214:13:52 IST Report Abuse
Kavitha RIP
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X