ஜூலையில் மொத்தவிலை பணவீக்கம் 13.93 % ஆக குறைந்தது

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
உணவு பொருட்கள் விலை சற்று குறைந்ததால், ஜூலையில் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் 13.93 சதவீதமாக குறைந்துள்ளது. இது 5 மாதங்களில் பதிவான குறைந்தபட்ச பணவீக்கம் ஆகும். நாட்டின் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் ஜூலையில், 13.93 சதவீதமாக குறைந்துள்ளது. இருந்த போதும், தொடர்ச்சியாக 16வது மாதமாக இரட்டை இலக்கத்தில் நீடிக்கிறது. ஜூனில் மொத்த விலை பணவீக்கம் 15.18 சதவீதமாக இருந்தது. மே
மொத்த விலை பணவீக்கம், Wholesale Price Index, ஜூலை, July, inflation, data, Food articles, Manufactured Goods


உணவு பொருட்கள் விலை சற்று குறைந்ததால், ஜூலையில் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் 13.93 சதவீதமாக குறைந்துள்ளது. இது 5 மாதங்களில் பதிவான குறைந்தபட்ச பணவீக்கம் ஆகும்.நாட்டின் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் ஜூலையில், 13.93 சதவீதமாக குறைந்துள்ளது. இருந்த போதும், தொடர்ச்சியாக 16வது மாதமாக இரட்டை இலக்கத்தில் நீடிக்கிறது. ஜூனில் மொத்த விலை பணவீக்கம் 15.18 சதவீதமாக இருந்தது. மே மாதம் முன்னெப்போதும் இல்லாத வகையில், 15.88 சதவீதமாக இருந்தது. கடந்தாண்டு இதே காலத்தில் மொத்த விலை பணவீக்கம் 11.57 சதவீதமாக இருந்தது.


latest tamil newsஉணவு பொருட்கள் மீதான பணவீக்கம், ஜூலையில் 10.77 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 14.39 சதவீதமாக இருந்தது. காய்கறிகள் விலை உயர்வு ஜூலையில், 18.25 சதவீதமாக குறைந்தது. முந்தைய மாதத்தில் 56.75 சதவீதமாக இருந்தது. எரிபொருள் மீதான பணவீக்கத்தை பொறுத்தவரை, 43.75 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய மாதத்தில் 40.38 சதவீதமாக இருந்தது. உற்பத்தி பொருட்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் முறையே 8.16 சதவீதம், (- 4.06 ) சதவீதமாக இருந்தது.

ரிசர்வ் வங்கி பொதுவாக சில்லறை பணவீக்கம் அடிப்படையில் தான், பணக்கொள்கையை தீர்மானிக்கிறது. ஜூலையில் பதிவான 6.71 சதவீதம் சில்லறை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் வரம்பை விட 7வது மாதமாக அதிகரித்து காணப்படுகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ரெபோ விகிதத்தை இந்தாண்டு மட்டும் மூன்று முறை உயர்த்தியுள்ளது. 2022-23ம் நிதியாண்டில், சராசரி சில்லறை பணவீக்கம், 6.7 சதவீதமாக இருக்குமென மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shanan -  ( Posted via: Dinamalar Android App )
16-ஆக-202220:57:14 IST Report Abuse
shanan ஆனால் எந்த பொருள் விளையும் குறைந்த மாதிரி தெரியவில்லையே
Rate this:
Cancel
Columbus -  ( Posted via: Dinamalar Android App )
16-ஆக-202218:29:53 IST Report Abuse
Columbus Correct. Europe in general and Germany in particular are terrified of inflation. 100 years back, it was inflation that propelled Adolf Hitler to power. Modi administration has done a good job keeping inflation and rupee exchange rate in control. During UPA time, inflation used to be in double digit.
Rate this:
Cancel
16-ஆக-202216:01:40 IST Report Abuse
ஆரூர் ரங் வெறும் ஒரு சதவீத பணவீக்கத்தையே பெரிதாக நினைத்துக் கொண்டிருந்த அமெரிக்காவில் இப்போது ஒன்பது சதவீதத்தை தொட்டுவிட்டது கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் நம்மை விட அதிக பணம் வீக்கம் உள்ளது .உக்கிரன் போர் துவங்கியதிலிருந்து இதுதான் நிலைமை. ரஷ்யா கொஞ்சம் ஓரளவாவது போர் நிறுத்தத்தை அறிவித்தால்தான்🤔 நிலைமை சற்று சீரடைய வாய்ப்புண்டு. மேலும் கடுமையான வெள்ளப்பெருக்கு எல்லா தென் மாநிலங்களையும் பாதித்துக் கொண்டிருக்கிறது .இதனால் தானியங்கள் மற்றும் காய்கறி விளைச்சல் 20 முதல் 30 சதவீதம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X