வங்கிக் கொள்ளை: அனைத்து நகைகளும் மீட்பு

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
விழுப்புரம்: சென்னை வங்கியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஒரே பள்ளியில் படித்த மாணவர்கள் என்பது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. அவர்களிடம் இருந்து 28 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 10 கிலோ தங்கம் பறிமுதல்
வங்கிக் கொள்ளை: அனைத்து நகைகளும் மீட்பு

விழுப்புரம்: சென்னை வங்கியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் ஒரே பள்ளியில் படித்த மாணவர்கள் என்பது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. அவர்களிடம் இருந்து 28 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரத்தில், இந்த வழக்கில் கைதான சூர்யா என்பவனின் நண்பரிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவையில் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 700 கிராம் தங்க நகைகள் உருகிய நிலையில் மீட்கப்பட்டதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், வங்கியில் கொள்ளை போன அனைத்து நகைகளும் மீட்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
17-ஆக-202208:11:29 IST Report Abuse
N Annamalai காவல்துறைக்கு பாராட்டுகள் .வங்கிகள் இன்னும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் .அனைவரின் தங்கமும் அங்கு தான் உள்ளது .
Rate this:
Cancel
krishnamurthy - chennai,இந்தியா
16-ஆக-202218:29:53 IST Report Abuse
krishnamurthy போனது முப்பது ஒன்று கிலோ. கிடைத்தது முப்பத்தியெட்டு கிலோ . எப்படி .
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
16-ஆக-202217:58:38 IST Report Abuse
Girija அப்போ முதல்லயே 28 கிலோ பறிமுதல் பண்ணிவிட்டு எதற்கு 18 கிலோ என்று சொன்னார்கள் ? உருக்கபட்ட நகைகளின் செய்கூலி சேதாரம் யார் தருவார் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X