ஏழைகளுக்கான சாப்பாடு சரியில்லை: மேலாளரை அறைந்த எம்.எல்.ஏ.,

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
மும்பை: மதிய உணவு திட்டத்தில் மோசமான உணவு வழங்கியதாக கூறி, அதனை தயாரித்த நிறுவனத்தின் மேலாளரை அறைந்த , மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ., செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஹிங்கோலி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்காக மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சாப்பாடு சரியில்லை எனக்கூறி எம்.எல்.ஏ., பங்கர் அறைந்துள்ளார்.
Balasaheb, ShivSainik, Leader, Caterer, Bad Food,
Shiv Sena, slap, catering manager, food quality,

மும்பை: மதிய உணவு திட்டத்தில் மோசமான உணவு வழங்கியதாக கூறி, அதனை தயாரித்த நிறுவனத்தின் மேலாளரை அறைந்த , மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ., செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹிங்கோலி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்காக மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சாப்பாடு சரியில்லை எனக்கூறி எம்.எல்.ஏ., பங்கர் அறைந்துள்ளார். தங்களுக்கு வழங்கப்படும் சாப்பாடு சரியில்லை என தொழிலாளர்கள் புகார் தெரிவித்ததாக கூறிய பங்கர், உணவு வழங்கப்படும் இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது, உணவை தயாரித்த உணவு மேலாளரை அழைத்து அறைந்துள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


latest tamil newsதனது செயலை நியாயப்படுத்தி பங்கர் கூறியதாவது: இரவு பகலாக உழைக்கும் ஏழை மக்களுக்கு நல்ல சாப்பாடு வழங்க வேண்டும் என்பதற்காக அரசு உழைத்து வருகிறது. ஆனால், சில ஒப்பந்ததாரர்கள் ஊழல் செய்கின்றனர். சாப்பாட்டில் கத்தரிக்காய், கேரட் இல்லை. மோசமான அரிசியும், பருப்பும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பூச்சிகள் கிடந்தன. இது குறித்து முதல்வரிடம் புகார் கூறி, ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளேன். உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்த போது காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் எங்களுடன் இருந்தனர். அவர்கள் எங்களது குரலை கேட்கவில்லை. மாறாக அடக்குவதில் தான் குறியாக இருந்தனர். தற்போது ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். இதனால், எங்களது குரல்கள் எழ துவங்கி உள்ளது. நாங்கள் பால்தாக்கரே தொண்டர்கள். அநீதி எழுந்தால், எங்களது குரலை எழுப்புவோம் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
17-ஆக-202206:41:22 IST Report Abuse
D.Ambujavalli அந்த உணவு ஒப்பந்தக்காரர் 'கொடுத்து' மீந்ததில் இவ்வளவுதான் முடியும் என்று கூறியிருக்க வேண்டும்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
17-ஆக-202206:15:59 IST Report Abuse
NicoleThomson வேதனையான சம்பவம் அரசியல்வாதிகள் கைநீட்டி பிச்சை(ஊழல் ) வாங்கவில்லை என்றால் ஏன் இப்படி தரம் குறைய போகிறது , அவர்கள் பிச்சை வாங்குவதால் அதிகாரிகளும் பிச்சை வாங்குகின்றனர் , கடைசியில் பயனாளிக்கு என்ன கொடுப்பார்கள் இந்த மேனேஜர்கள்
Rate this:
Cancel
Sampath - Chennai,இந்தியா
17-ஆக-202205:19:37 IST Report Abuse
Sampath , who did the same when Governer convoy was passing through. who did the same, when central finance minister's convoy was passing through
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X