'ஜன கண மன' பாடலை இசைத்து இந்தியர்களுக்கு பரிசளித்த பாகிஸ்தானியர்

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
நம் நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை நேற்று (ஆக., 15) நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். இவ்வேளையில் பாகிஸ்தானைச் சேர்ந்த இசைக் கலைஞர் சியல் கான் என்பவர் இந்தியர்களுக்கு ஒரு பரிசளிப்பதாக கூறி ரபாப் இசைக் கருவியில் நமது தேசிய கீதமான'ஜன கண மன' பாடலை இசைத்து பதிவேற்றியுள்ளார். அவ்வீடியோ 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரால்
IndependenceDay2022, Trending_Video, Pakistan, India, Siyal_Khan,

நம் நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை நேற்று (ஆக., 15) நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். இவ்வேளையில் பாகிஸ்தானைச் சேர்ந்த இசைக் கலைஞர் சியல் கான் என்பவர் இந்தியர்களுக்கு ஒரு பரிசளிப்பதாக கூறி ரபாப் இசைக் கருவியில் நமது தேசிய கீதமான'ஜன கண மன' பாடலை இசைத்து பதிவேற்றியுள்ளார். அவ்வீடியோ 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரால் பார்க்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் உரசல் போக்கு உள்ள நிலையில், இந்தியர்களிடம் அன்பை வெளிப்படுத்தும் வகையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ரபாப் இசைக் கலைஞர் சியல் கான் “எல்லைகள் கடந்துள்ள எனது பார்வையாளர்களுக்கு ஒரு பரிசு” என்ற பெயரில் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதில் கண்ணுக்கினிய மலை பிரதேசத்தில் அமர்ந்த படி நமது தேசிய கீதமான ஜன கண மன பாடலை அவர் பக்தியுடன் இசைத்துள்ளார்.


latest tamil news



மேலும் அந்த வீடியோவின் கீழ் “சுதந்திர தின வாழ்த்துகள் இந்தியா. அமைதி, சகிப்புத்தன்மை, நட்பு மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக இந்தியாவின் தேசிய கீதத்தை நான் முயற்சித்திருக்கிறேன்.” என குறிப்பிட்டிருந்தார்.

பாகிஸ்தானியர் ஒருவர் ஜன கண மன பாடலை இசைத்துள்ளது சமூக வலைத்தளத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டது. அந்த வீடியோவை சில மணி நேரங்களில் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். மேலும் சியல் கானின் இந்த முயற்சியை இந்தியர்கள் பலரும் பாராட்டியுள்ளனர். ஒருவர், “இசைக்கு மொழியோ மதமோ கிடையாது... நெஞ்சை தொடும் இந்த இசை மக்களை இணைத்துள்ளது.” என கூறியுள்ளார்.

மற்றொருவர், “எல்லைகள் வெறும் நிலங்களை பிரித்துள்ளன. இதயங்களை அல்ல. அமைதி மற்றும் அன்பினை உங்கள் கலை மூலம் தொடர்ந்து பரப்புங்கள். கலையும், கலைஞர்களும் எந்த எல்லைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். எதுவும் அவர்களைக் கட்டுப்படுத்தாது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
17-ஆக-202206:07:47 IST Report Abuse
NicoleThomson வாழ்த்துக்கள் நண்பரே , உங்களின் மார்க்கம் சொல்லுகிறது என்று பலர் சொல்லுவதை கேட்டு மூர்க்கமாய் நடப்பதை விட சுய அறிவு கொண்டு சிந்திக்கும் உங்களை வாழ்த்துகிறேன் , அப்படி மூர்க்கமாய் நடப்பது என்பது ராணுவ அதிகாரிகளுக்கும் , அரசியல்வாதிகளுக்கும் தான் பொருந்தும் பொதுமக்களுக்கு அல்ல என்று புரியவைத்தமைக்கு நன்றி
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16-ஆக-202220:21:37 IST Report Abuse
Ramesh Sargam “சுதந்திர தின வாழ்த்துகள் இந்தியா. அமைதி, சகிப்புத்தன்மை, நட்பு மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக இந்தியாவின் தேசிய கீதத்தை நான் முயற்சித்திருக்கிறேன்.” உங்கள் முயற்சி வெற்றி அடைய எல்லாம் வல்ல ஈசனையும், அல்லாஹ்வையும் வேண்டிக்கொள்கிறேன். வாழ்க பாரதம். வளர்க இந்தியா-பாக்கிஸ்தான் ஒற்றுமை.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
16-ஆக-202220:08:17 IST Report Abuse
Vena Suna இந்த அந்நிய சிவப்பன் நம் தேசிய கீதம் வாசிக்கிறான். இங்கே கருப்பன் தனி நாடு கேட்கிறான்.முதலில் அண்ணாதுரை கேட்டார். அப்புறம் பயந்து அடக்கினார் . கேட்பதை விட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X