சாதி, மதம் இல்லையென சான்று: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை: சாதி, மதம் இல்லையென சான்றிதழ் வழங்கக்கோரி விண்ணப்பித்தவருக்கு 2 வாரங்களில் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மனோஜ் என்பவர், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவர், மனுவில், காதல் திருமணம் செய்து கொண்டதால் மகனை பள்ளியில் சேர்ப்பதற்காக சாதி, மதம் இல்லையென சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளேன். ஆனால்
coast,சாதி, மதம்,சான்றிதழ்

சென்னை: சாதி, மதம் இல்லையென சான்றிதழ் வழங்கக்கோரி விண்ணப்பித்தவருக்கு 2 வாரங்களில் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மனோஜ் என்பவர், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவர், மனுவில்,
காதல் திருமணம் செய்து கொண்டதால் மகனை பள்ளியில் சேர்ப்பதற்காக சாதி, மதம் இல்லையென சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளேன். ஆனால் சான்றிதழ் பெறுவதற்கு தாமதமாகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் இன்று (ஆக.,16) விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையில் சாதி, மதம் இல்லையென சான்றிதழ் வழங்க அம்பத்தூர் வட்டாட்சியர் ஒப்புக்கொண்டதாக அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டார். விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்ட நபருக்கு 2 வாரங்களுக்குள் சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - Trichy,இந்தியா
17-ஆக-202210:44:57 IST Report Abuse
Tamil சாதி மதம் இல்லை என முப்பது ஆண்டுகளுக்கு முன்பே கமல்ஹாசன் தன் மகள்களை பள்ளியில் சேர்க்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருப்பினும் சாதி மதம் அவரவர் தனிப்பட்ட விருப்பமாக இருக்கமுடியுமோ தவிர யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.
Rate this:
Cancel
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
17-ஆக-202210:04:48 IST Report Abuse
முதல் தமிழன் இதில் உடன்பாடு இல்லை. மகனோ, மகளோ அவர் அவர் விருப்பப்படி ஜாதி, மத உணர்வுகளுக்கு இடம் உண்டு. வேண்டும் என்றால், காதலித்து திருமணம் செய்த ரெண்டு பெரும் வேணாம் என்று இருக்கட்டும். இவர்களுக்கு தான் பெத்த பிள்ளைகளின் எதிர்கால அரசு உதவிகள் கிடைக்காமல் போக வைக்க அருகதை இல்லை.
Rate this:
Cancel
Nachimuthu - mettur,இந்தியா
17-ஆக-202209:35:24 IST Report Abuse
Nachimuthu பள்ளியில் சேர்க்கும் போதே ஜாதிய சேர்க்காமல் இருந்தால் ஜாதிய ஒழித்துவிடலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X