800 ஆண்டுகளுக்கு முந்தையசோழர் கல்வெட்டு கண்டெடுப்பு

Added : ஆக 16, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
தியாகதுருகம்:வடதொரசலுார் கிராமத்தில், 800 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால பலகை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த வடதொரசலுார் கிராமத்தில் ஏரிக்கரை அருகே உள்ள பிடாரி அம்மன் கோவில் வளாகத்தில், சிவன் கோவிலுக்கான கல்வெட்டுகள் இருப்பதாக ஆய்வாளர்களுக்கு தகவல் கிடைத்தது.கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர்
800 ஆண்டுகளுக்கு முந்தையசோழர் கல்வெட்டு கண்டெடுப்பு

தியாகதுருகம்:வடதொரசலுார் கிராமத்தில், 800 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால பலகை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த வடதொரசலுார் கிராமத்தில் ஏரிக்கரை அருகே உள்ள பிடாரி அம்மன் கோவில் வளாகத்தில், சிவன் கோவிலுக்கான கல்வெட்டுகள் இருப்பதாக ஆய்வாளர்களுக்கு தகவல் கிடைத்தது.கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன் தலைமையில், தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
சிங்கார உதியன் கூறியதாவது:ஐந்து அடி நீளமும், மூன்றரை அடி அகலமும் உள்ள கல்லில் இருபுறமும் எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளன. இரண்டாம் குலோத்துங்க சோழனின், 12ம் நுாற்றாண்டு கால இந்த கல்வெட்டில், முதல் பக்கத்தில் 20 வரிகள், இரண்டாம் பக்கத்தில், 24 வரிகள் உட்பட மொத்தம், 44 வரிகள் சிதைந்த நிலையில் உள்ளன.கல்வெட்டின் இறுதியில் வழக்கமாகக் காணப்படும் எச்சரிக்கை வாசகம் இதில் காணப்படவில்லை. இதனால், முழுமையாகப் படித்து அறிய முடியவில்லை.
இரண்டாம் குலோத்துங்க சோழனின் 'பூமேவி வளர' எனும் மெய்கீர்த்தி முழுமையாக இடம் பெற்று உள்ளது.மிகப்பெரிய சிவாலயம் இங்கு இருந்ததற்கு ஆதாரமாக, இப்பகுதியைச் சுற்றி நேர்த்தியானப் பழமை வாய்ந்த, பல்வேறு அளவுகளில் உள்ள சிலைகள் காணப்படுகின்றன. மத்திய, மாநில அரசு கள் இப்பகுதியில் தொல்லியல் அகழாய்வு நடத்தினால், இப்பகுதியின் தொன்மை வரலாறு வெளிப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
18-ஆக-202205:19:22 IST Report Abuse
Fastrack விடியல் ஆட்சியில் நிறைய கல்வெட்டுகள் கிடைக்கிறதே ..அதுவும் எந்த காலகட்டத்தில் தயாரானது என்ற தகவலோடு ..
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
18-ஆக-202204:05:46 IST Report Abuse
NicoleThomson வழக்கம் போல அகழாய்வு நடத்தினாலும் மக்களின் பெயரில் இடத்தை சுரண்டிய?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X