'எலக்ட்ரோடெக்' கண்காட்சியில் கவர்ந்த மின் வாகனங்கள்

Added : ஆக 16, 2022 | |
Advertisement
கோவை:கோவையில் நடக்கும் 'எலக்ட்ரோடெக் 2022' கண்காட்சியில் எலக்ட்ரிக் வாகனங்கள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளன.இரு சக்கர வாகனங்கள்கோவை, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் 'எலெக்ட்ரோடெக் 2022' கண்காட்சி சமீபத்தில் நிறைவடைந்தது.உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை மக்களின் வாகன செலவை அதிகரித்து வருகிறது. எனவே, எரிபொருளுக்கு மாற்றாக மின் சக்தியை
'எலக்ட்ரோடெக்' கண்காட்சியில் கவர்ந்த மின் வாகனங்கள்

கோவை:கோவையில் நடக்கும் 'எலக்ட்ரோடெக் 2022' கண்காட்சியில் எலக்ட்ரிக் வாகனங்கள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளன.


இரு சக்கர வாகனங்கள்


கோவை, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் 'எலெக்ட்ரோடெக் 2022' கண்காட்சி சமீபத்தில் நிறைவடைந்தது.உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை மக்களின் வாகன செலவை அதிகரித்து வருகிறது. எனவே, எரிபொருளுக்கு மாற்றாக மின் சக்தியை பயன்படுத்தி இயங்கும் வாகனங்களில் குறிப்பாக, இரண்டு சக்கர வாகனங்கள் வாடிக்கையாளர் களை அதிகம் கவர்ந்தன.
கண்காட்சியில், 60 ஆயிரம் ரூபாய் முதல், 2.5 லட்சம் வரையிலான இரு சக்கர வாகனங்கள் இடம் பெற்றிருந்தன.ஐந்து ஆண்டுகள் வரை பேட்டரியின் வாழ்நாள் கொண்ட வாகனங்கள், 70 ஆயிரம் முதல், 1.20 லட்சம் வரை விற்பனையாகின்றன. ஒரு முறை சார்ஜ் செய்தால், 100 கி.மீ., வரை செல்லும் திறன் கொண்டவையாக உள்ளன. இவற்றை, ஐந்து மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும்.


வரவேற்பு


மணிக்கு, 25 கி.மீ., குறைந்த வேகத்தில், அதிக லோடு ஏற்றி செல்லும் இரு சக்கர வாகனங்கள் தொழிற்சாலைகளின் தேவையை பூர்த்திசெய்கின்றன. தவிர, ஆட்டோ, கார்கள் மக்களை கவர்ந்தன. டாடா நிறுவனத்தின், 12 லட்சம் முதல், 24 லட்சம் வரையிலான எலக்ட்ரிக் கார்கள் இடம்பெற்றன.மரபுசாரா எரிசக்திகளில் ஒன்றான சூரிய ஒளி மின்சக்திக்கு வரவேற்பு கூடியுள்ளது.
வீட்டுக் கூரைகளில் அமைக்கப்படும் சோலார் பேனல் முதல் தொழிற்சாலைகளுக்கு பயன்படும் பெரும் மின் உற்பத்தி பேனல்கள் வரை காட்சிப்படுத்தப்பட்டன.சூரிய ஒளிக்கலன்களை அமைக்க, 40 சதவீதம் வரை அரசு மானியம் கிடைக்கிறது. இது குறித்த தகவல்களுடன், வீட்டுக்கு தேவையான கேபிள், லைட், அலங்கார விளக்குகள் உள்ளிட்டவை பற்றியும் கண்காட்சி ஸ்டால்களில் விளக்கம் தந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X