3 நாட்களில் 50 ஆயிரம் சுற்றுலா பயணியர் 'விசிட்'

Added : ஆக 16, 2022 | |
Advertisement
ஊட்டி:தொடர் விடுமுறையை அடுத்து ஊட்டிக்கு மூன்று நாட்களில், 50 ஆயிரம் சுற்றுலா பயணியர் குவிந்தனர்.நீலகிரியில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால், இரு வாரங்களுக்கு மேலாக கன மழை பெய்தது. இதனால், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை தினமும் குறைவாகவே இருந்தது. கடந்த மூன்று நாட்களாக மழை இல்லை.வார விடுமுறை, சுதந்திர தின விடுமுறை என, தொடர் விடுமுறையை அடுத்து,
3 நாட்களில் 50 ஆயிரம் சுற்றுலா பயணியர் 'விசிட்'

ஊட்டி:தொடர் விடுமுறையை அடுத்து ஊட்டிக்கு மூன்று நாட்களில், 50 ஆயிரம் சுற்றுலா பயணியர் குவிந்தனர்.
நீலகிரியில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால், இரு வாரங்களுக்கு மேலாக கன மழை பெய்தது. இதனால், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை தினமும் குறைவாகவே இருந்தது. கடந்த மூன்று நாட்களாக மழை இல்லை.வார விடுமுறை, சுதந்திர தின விடுமுறை என, தொடர் விடுமுறையை அடுத்து, தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் பயணியரின் வருகை அதிகரித்தது.
மூன்று நாட்களில், 50 ஆயிரம் சுற்றுலா பயணியர், ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வந்துள்ளனர்.இதனால், ஊட்டியில் உள்ள சுற்றுலா விடுதிகள் நிரம்பின. நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுற்றுலா மையங்களில் நேற்று உள்ளூர் மக்களின் கூட்டமும் அதிகளவில் காணப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X