பொதுப் போக்குவரத்தில் நின்றுகொண்டு பயணித்த துபாய் இளவரசர்!

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
தமிழக முதல்வர் ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன் அரசுப் பேருந்தில் பயணித்து பெண்களுக்கான இலவச பயணத் திட்டம் குறித்து கேட்டறிந்தார். அதே போல் விடுமுறைக்காக லண்டன் சென்றுள்ள துபாய் பட்டத்து இளவரசர் அங்குள்ள பொதுப் போக்குவரத்தில் எளிமையாக பயணித்தார். அப்படங்கள் இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளியுள்ளன.ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப் பெரிய நகரம் துபாய். உலகை இணைக்கும் நகரமாக
Dubai_Prince, Fazza, Tube_Train, Stalin

தமிழக முதல்வர் ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன் அரசுப் பேருந்தில் பயணித்து பெண்களுக்கான இலவச பயணத் திட்டம் குறித்து கேட்டறிந்தார். அதே போல் விடுமுறைக்காக லண்டன் சென்றுள்ள துபாய் பட்டத்து இளவரசர் அங்குள்ள பொதுப் போக்குவரத்தில் எளிமையாக பயணித்தார். அப்படங்கள் இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளியுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப் பெரிய நகரம் துபாய். உலகை இணைக்கும் நகரமாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துபாயின் முக்கிய ஏற்றுமதியாக உள்ளது. அது தவிர தங்கம், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்கிறது. துபாயின் பட்டத்து இளவரசராக 2008 முதல் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் உள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இயங்குபவர்.


latest tamil news


கடந்த 2020ல் தனது பென்ஸ் சொகுசு காரில் குருவி ஒன்று கூடு கட்டியதற்காக, அது குஞ்சு பொறிக்கும் வரை அந்த காரை குருவிக்காகவே விட்டுக் கொடுத்தார். இளவரசர் ஷேக் ஹமதானின் அச்செயலில் இணையத்தில் டிரெண்ட்டானது. பாராட்டையும் பெற்றுத்தந்தது. அதிலிருந்து அவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் உயர்ந்தது. தற்போது விடுமுறையை கழிக்க துபாய் இளவரசர் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் லண்டன் சென்றுள்ளார்.

அங்கு சாதாரண பொது மக்களை போல அவர் வலம் வந்தார். லண்டனில் நம்மூர் மெட்ரோவை போல டியூப் ரயில்கள் நகரின் பல பகுதிகளையும், பிற மாவட்டங்களையும் இணைக்கின்றன. கடந்த வாரம் தனது நண்பருடன் டியூப் ரயிலில் உட்கார இடமின்றி நின்றுகொண்டு பயணித்தார். “இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது.” என தனது நண்பருடன் எடுத்தப் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். மேலும் டியூப் ரயிலில் பயணித்தவர்களுக்கு உடன் பயணிப்பவர் துபாய் இளவரசர் என தெரியாததால் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்தப் புகைப்படம் பல லட்சம் பேரால் விரும்பப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
17-ஆக-202207:31:47 IST Report Abuse
சீனி அது தான் ராயல் துபாய், அங்கே கொள்ளையடிச்ச 6000ம் கோடிய கொண்டுபோனவன் நாறவாய்...
Rate this:
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
17-ஆக-202202:05:26 IST Report Abuse
பிரபு அவர்களது சொந்த நாடான துபாயிலேயே அந்த நாட்டு அரசர் போக்குவரத்து சிக்னலில் எல்லோரையும் போல நின்று சிக்னல் விழுந்தவுடன் எல்லோரோடும் சேர்ந்து செல்வார். பரம்பரை அரசர்களுக்கும் பதவிக்காக வந்த அரசியல்வாதிகளுக்கும் உள்ள வித்தியாசம் அதுதான்.
Rate this:
Cancel
ஸ்டிக்கன் 1 - Al-kayyar,பஹ்ரைன்
17-ஆக-202200:42:38 IST Report Abuse
ஸ்டிக்கன் 1 என்ன ஒரு polithNam உழைத்து இவன் பணக்காரன் ஆயிருந்தா இது பாராட்ட வேண்டிய ஒன்று ஆனால் பரம்பரை என்று கூறி திருடும் வர்க்கம் அல்லவா தமிழகத்திலும் இது போன்று நிறைய பெரை பார்த்துள்ளோம்
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
17-ஆக-202206:30:48 IST Report Abuse
NicoleThomsonகாலம் காலமாய் குடும்பங்களே அரசாட்சி செய்து வந்துள்ளன, சுதந்திரம் உள்ள தமிழகம் ஆகட்டும், சுதந்திரம் அற்ற அரபுலகம் ஆகட்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X