ஊழலை தடுக்கும் ஊழியர்கள் கவுரவிக்கிறது சி.வி.சி.,

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி : ஊழல் மற்றும் நிதிமுறைகேடுகளை தடுக்க விழிப்புடன் செயல்பட்ட அரசு ஊழியர்களை கவுரவிக்க மத்திய ஊழல் தடுப்பு கமிஷன் முடிவு செய்துள்ளது.இது குறித்து சி.வி.சி., எனப்படும் மத்திய ஊழல் தடுப்பு கமிஷன் வெளியிட்டுள்ள உத்தரவு:பொது நிர்வாகத்தில் ஊழல் நடப்பதற்கு முன்பே அதை கண்காணித்து தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு சி.வி.சி., எப்போதும் அதிக முக்கியத்துவம்
ஊழல், தடுக்கும், ஊழியர்கள், கவுரவிக்கிறது, சி.வி.சி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : ஊழல் மற்றும் நிதிமுறைகேடுகளை தடுக்க விழிப்புடன் செயல்பட்ட அரசு ஊழியர்களை கவுரவிக்க மத்திய ஊழல் தடுப்பு கமிஷன் முடிவு செய்துள்ளது.


இது குறித்து சி.வி.சி., எனப்படும் மத்திய ஊழல் தடுப்பு கமிஷன் வெளியிட்டுள்ள உத்தரவு:
பொது நிர்வாகத்தில் ஊழல் நடப்பதற்கு முன்பே அதை கண்காணித்து தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு சி.வி.சி., எப்போதும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.


latest tamil news



பல்வேறு அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல் மற்றும் நிதி முறைகேடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தங்கள் நேர்மையான செயல்பாடு வாயிலாக அதை தடுத்து நிறுத்திய ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களை கவுரவிக்க கமிஷன் முடிவு செய்துள்ளது.


தகுதி வாய்ந்த ஊழியர்களின் பெயர்களை அரசுத்துறை அதிகாரிகள் பரிந்துரைக்கலாம். ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தின்போது அவர்கள் கவுரவிக்கப்படுவர்.
கடந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு துறைகளிலும் எடுக்கப்பட்ட ஊழல் தடுப்பு நடவடிக்கையை, அனைத்து தலைமை ஊழல் தடுப்பு அதிகாரிகள் அடையாளம் காணவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஆக-202204:26:02 IST Report Abuse
Boopathi Subramanian 0 ,,,
Rate this:
Cancel
Kavi - Karur,இந்தியா
17-ஆக-202203:07:57 IST Report Abuse
Kavi நல்ல முடிவு.
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
17-ஆக-202202:20:01 IST Report Abuse
Manguni திமுகவை அழிக்கும் செய்தி. திமுக இந்த பயனை என்றும் பெற முடியாது. எம திருடர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X