கங்கை நதியை தூய்மை படுத்த ரூ. 30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி: கங்கை நதியை தூய்மை படுத்த ரூ. 30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இமயமலையில் உற்பத்தியாகி உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் என பல்வேறு மாநிலங்கள் வழியாக பாய்ந்தோடும் ஜீவநதியான கங்கை நதி சுமார் 2 ஆயிரத்து 525 கி.மீ. நீளம் கொண்டது. இந்நதியானது, அண்டை நாடான வங்கதேசம் வழியாக பாய்ந்து இறுதியில் வங்க கடலில் கலக்கிறது. இதற்கிடையில்,
  30,000 Crore Sanctioned To Clean Ganga: Jal Shakti Minister

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கங்கை நதியை தூய்மை படுத்த ரூ. 30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இமயமலையில் உற்பத்தியாகி உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் என பல்வேறு மாநிலங்கள் வழியாக பாய்ந்தோடும் ஜீவநதியான கங்கை நதி சுமார் 2 ஆயிரத்து 525 கி.மீ. நீளம் கொண்டது. இந்நதியானது, அண்டை நாடான வங்கதேசம் வழியாக பாய்ந்து இறுதியில் வங்க கடலில் கலக்கிறது. இதற்கிடையில், கங்கை நதி மிகவும் மாசடைந்து வருவதால் அதை தூய்மை படுத்துவதற்கான துறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.


latest tamil newsஇந்த நிலையில், கங்கை மற்றும் அதன் துணை நதிகளை சுத்தப்படுத்த ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இது தொடர்பாக மத்திய நீர்வளத் துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியது, இந்தியாவின் நீர் வளங்கள் மற்றும் சுற்றுச் சூழல் சவால்களை கருத்தில் கொண்டு, இயற்கை வளங்களின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டியது அவசியம். கங்கை மற்றும் அதன் துணை நதிகளை சுத்தப்படுத்த ஏராளமான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
17-ஆக-202208:28:50 IST Report Abuse
venugopal s இதுவரை கங்கையைத் தூய்மை படுத்தும் திட்டத்துக்கு செலவழித்த பணத்தில் தென்னக நதிகளை இணைக்க பயன் படுத்தி இருந்தால் தென் இந்தியா மேலும் வளமை ஆகி இருக்கும்.இது காசுக்கு பிடித்த கேடு, எவ்வளவு செலவு செய்தாலும் கங்கையை மீண்டும் நாற அடிப்பார்கள் நம் வட இந்திய மக்கள்.
Rate this:
Cancel
CBE CTZN - Coimbatore,இந்தியா
17-ஆக-202207:32:09 IST Report Abuse
CBE CTZN பிஜேபி = கங்கை நதியை சுத்தம் செய்ய நிதியை(எல்லாம் நம்ம ஜீஎஸ்டி நிதி தான்) ஒதுக்குகிறது... திமுக= கூவம் நதியை சுத்தம் செய்ய நிதியை(எல்லாம் நம்ம சொத்துவரி தான்) ஒதுக்குகிறது.. மொத்தத்துல இந்த ரெண்டுபேரும், மக்கள் பணத்தை ஆட்டைய போடுற கூட்டம் தான்...
Rate this:
Cancel
17-ஆக-202206:06:54 IST Report Abuse
அப்புசாமி ஏற்கனவே கொட்டுன 30000 கோடி என்ன ஆச்சுன்னு தெரியலை. இப்போ அடுத்த 30000 கோடி கொட்டப் போறாங்களாம். திராவிட மாடலை விட பெரிய ஆட்டையா இருக்கும் போலிருக்கே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X