பன்றிக்கு வைத்த வெடியில் பசு பலி : குன்னூரில் தொழிலாளி கைது

Added : ஆக 16, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
குன்னூர் : குன்னூரில் காட்டு பன்றிக்கு வைத்த வெடியில் பசுமாடு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ஹாஸ்பிடல் சேர பகுதியில், ஹாபி என்பவர் வளர்த்து வந்த பசு மாடு, கடந்த ஜூன் மாதம் 08ம் தேதி , காய் வெடி கடித்ததில், வாய் கிழிந்த நிலையில் துடிதுடித்து உயிரிழந்தது. வனத்துறையினர், ராணுவ போலீசார், வெலிங்டன் போலீசார்
பன்றிக்கு வைத்த வெடியில் பசு பலி : குன்னூரில் தொழிலாளி கைது

குன்னூர் : குன்னூரில் காட்டு பன்றிக்கு வைத்த வெடியில் பசுமாடு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ஹாஸ்பிடல் சேர பகுதியில், ஹாபி என்பவர் வளர்த்து வந்த பசு மாடு, கடந்த ஜூன் மாதம் 08ம் தேதி , காய் வெடி கடித்ததில், வாய் கிழிந்த நிலையில் துடிதுடித்து உயிரிழந்தது. வனத்துறையினர், ராணுவ போலீசார், வெலிங்டன் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இது தொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர் அருள் ரத்தினம் கொடுத்த புகாரின்பேரில், வெடிவைத்தல், விலங்குகளை துன்புறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வெலிங்டன் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சேலாஸ் சோல்ராக் எஸ்டேட் பகுதியை சேர்ந்த பாரம் தூக்கும் தொழிலாளி சந்தோஷ் குமாரை 31, போலீசார் விசாரணை நடத்தியதில், சிவகாசியில் இருந்து பட்டாசுக்கள் வாங்கி வந்து, வெடிமருந்துகளை பிரித்து, அவுட்டு காய் வெடியை தயார் செய்ததும், இந்த வழக்கில் தொடர்பு இருந்ததும் தெரிய வந்தது. இதன்பேரில் சந்தோஷ் குமாரை கைது செய்த போலீசார், குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.இவரிடம் இருந்து 3 அவுட்டு காய் வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
17-ஆக-202206:43:19 IST Report Abuse
Natarajan Ramanathan அதாவது அமைதிமார்க்க ஆளுக்கு வைத்த வலையில் அப்பாவி ஹிந்து மாட்டுவது....
Rate this:
Cancel
17-ஆக-202201:07:08 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் "இவரிடம் இருந்து 3 அவுட்டு காய் வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன." .......... இவனை அதில் ஒன்றையாவது கடிக்க வையுங்கள் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X