மேற்கு வங்க தேர்தல் வன்முறை : பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி :மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் போது நடந்த வன்முறை தொடர்பாக, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேற்கு வங்கத்தில், கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார்.
மேற்கு வங்க தேர்தல் வன்முறை  பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

புதுடில்லி :மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் போது நடந்த வன்முறை தொடர்பாக, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில், கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார். தேர்தல் முடிவுகள் வெளியானதும், பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் மீது, திரிணமுல் காங்., கட்சியினர் தாக்குதல்
நடத்தினர்.


latest tamil news



இதில், 15 பேர் உயிரிழந்தனர். பா.ஜ.,வினரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்நிலையில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ரஞ்சனா அக்னிகோத்ரி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:மேற்கு வங்கத்தில், தேர்தல் வன்முறையை தடுக்கத் தவறிய, திரிணமுல் அரசை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும்.
அங்கு, பாதுகாப்புக்கு மத்திய படைகளை அனுப்பி வைக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவின் கீழ், சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, இன்று (ஆக.16) விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், 'உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர், மேற்கு வங்க வன்முறை தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது' என்றார்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கும், மேற்கு வங்க மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vadivelu - thenkaasi,இந்தியா
17-ஆக-202209:01:06 IST Report Abuse
vadivelu இந்த நாட்டம் சீர்குலைக்க அந்நிய சக்திகள் மிகவும் மும்முரமாக வேலை செய்கிறன.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-ஆக-202205:33:20 IST Report Abuse
Kasimani Baskaran கள்ளக்குடியேறிகளை வெளியேற்றினால் அனைத்தும் சரியாகிவிடும்.
Rate this:
Dharmavaan - Chennai,இந்தியா
17-ஆக-202206:25:57 IST Report Abuse
Dharmavaanஅவர்களை ஆதரிப்பதே மம்தா பேகம்தான் அவர் ஆட்சி அகன்றால் எல்லாம் சரியாகிவிடும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X