தமிழ் இலக்கிய தேர்வு: 22 முதல் விண்ணப்பம்

Added : ஆக 16, 2022 | |
Advertisement
லம்:பிளஸ் 1 மாணவர்கள், தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வுக்கு, ஆக., 22 முதல் விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தில் அரசு, சுயநிதி பள்ளிகளில் மேல்நிலை கல்வி படிக்கும் மாணவ - மாணவியரிடம், தமிழ் மொழி இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்க, திறனறி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்வித்துறை சார்பில், அக்., 1ல் நடக்கும் இத்தேர்வில், 1,500 மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, இரு ஆண்டுகளுக்கு மாதம், 1,500

லம்:பிளஸ் 1 மாணவர்கள், தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வுக்கு, ஆக., 22 முதல் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் அரசு, சுயநிதி பள்ளிகளில் மேல்நிலை கல்வி படிக்கும் மாணவ - மாணவியரிடம், தமிழ் மொழி இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்க, திறனறி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்வித்துறை சார்பில், அக்., 1ல் நடக்கும் இத்தேர்வில், 1,500 மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, இரு ஆண்டுகளுக்கு மாதம், 1,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
அங்கீகாரம் பெற்ற சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., உட்பட அனைத்து பள்ளி மாணவ - மாணவியரும் பங்கேற்கலாம். 10ம் வகுப்பு தர நிலையில், தேர்வு நடத்தப்படும்.விண்ணப்பிக்க விரும்புவோர், வரும் 22 முதல், செப்., 9க்குள், தேர்வுத்துறை இணையதளத்தில் படிவத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து, 50 ரூபாய் தேர்வு கட்டணத்துடன், தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X