கூவம் ஏரி, ஆறு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில்... அலட்சியம்!;கனிம வளம் மாயம்:விவசாயமுமம் பாதிப்பு

Added : ஆக 16, 2022 | |
Advertisement
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில், கூவம் ஏரி மற்றும் ஆறு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், கனிம வளம் மாயமாகி வருவதாகவும், விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியத்தில், கூவம் ஏரி மற்றும் ஆறு ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி கனிம வளம் மாயமாகி
 கூவம்  ஏரி, ஆறு  ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில்... அலட்சியம்!;கனிம வளம்  மாயம்:விவசாயமுமம் பாதிப்பு

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில், கூவம் ஏரி மற்றும் ஆறு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், கனிம வளம் மாயமாகி வருவதாகவும், விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியத்தில், கூவம் ஏரி மற்றும் ஆறு ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி கனிம வளம் மாயமாகி வருகிறது.


கனரக வாகனங்கள்


இதனால், நீர் சேகரமாகாமல் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். கடம்பத்துார் ஒன்றியத்தில் எட்டுகுட்டிமேடு கிராமப் பகுதியில் உருவாகும் கூவம் ஏரி, 900 ஏக்கர் பரப்பு கொண்டது. இந்த ஏரியை நம்பி 1,500 ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்த ஏரி உருவாகும் எட்டுகுட்டிமேடு பகுதியில், ஏரி ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி செங்கல் சூளையாக மாறியுள்ளது.


செங்கல் சூளைக்கு தேவையான மணலை ஏரிப்பகுதியிலேய அனுமதியின்றி எடுத்து வருகின்றனர். மேலும், ஏரியின் கரைப்பகுதியை சேதப்படுத்தி கனரக வாகனங்கள் செல்லும் வகையில் பாதை அமைத்து பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் ஏரியில், நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்படுவதோடு, கனிம வளமும் மாயமாகி வருவது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


இதேபோல், இருளஞ்சேரி பகுதியில், கூவம் ஆற்று பகுதிகள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளாக மாறிஉள்ளன.இப்பகுதியில், ஆற்றில் மணல் திருட்டு, குடிசை தொழிலாளாகவே மாறிஉள்ளது. மேலும் கூவம் ஊராட்சியில் ஏரிக்கு வரும் வரத்து கால்வாய்களும், ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கி குடியிருப்புகளாக மாறிவிட்டது.


அதிர்ச்சி


தமிழக அரசு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம், கூவம் ஏரி, ஆறு நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கூவம் ஏரி பகுதியில் ஆய்வு செய்து செம்பரம்பாக்கம் ஏரி போல சீரமைக்க அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பி உள்ளோம்.


மேலும், கூவம் ஆற்றுப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து வருவாய்த் துறையினருடன் இணைந்து ஆய்வு செய்ய உள்ளோம்.மேலும், கூவம் ஊராட்சியில், ஏரிக்கு வரும் நீர் வரத்து கால்வாய், ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து, அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X