குண்டூசியை விழுங்கிய மாணவர் அரசு மருத்துவமனையில் அனுமதி

Added : ஆக 16, 2022 | |
Advertisement
ஓசூர்:ஓசூர் அருகே, குண்டூசியை விழுங்கியஅரசு பள்ளி மாணவர்,கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த மோரனப்பள்ளியை சேர்ந்தவர் ஆனந்த்; இவர் மனைவி தனலட்சுமி; இவர்களது மகன் எல்லேஷ், 12.அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கிறார். சுதந்திர தினத்தையொட்டி பள்ளி சென்ற மாணவருக்கு, சட்டையில் அணிய
குண்டூசியை விழுங்கிய மாணவர் அரசு மருத்துவமனையில் அனுமதி

ஓசூர்:ஓசூர் அருகே, குண்டூசியை விழுங்கியஅரசு பள்ளி மாணவர்,கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த மோரனப்பள்ளியை சேர்ந்தவர் ஆனந்த்; இவர் மனைவி தனலட்சுமி; இவர்களது மகன் எல்லேஷ், 12.அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கிறார். சுதந்திர தினத்தையொட்டி பள்ளி சென்ற மாணவருக்கு, சட்டையில் அணிய தேசியக்கொடி மற்றும் குண்டூசி வழங்கப்பட்டது.

அதை சட்டையில் அணிந்த மாணவர், மீண்டும் கொடி மற்றும் குண்டூசியை எடுத்து, தன் சீருடையில் வைத்து கொண்டார்.அதே உடையில் நேற்று பள்ளி வந்த மாணவர், குண்டூசியை வாயில் வைத்து, விளையாட்டாக தண்ணீர் குடித்தபோது விழுங்கி விட்டார்.இதை பள்ளி உடற்கல்வி ஆசிரியரிடம் மாணவர் தெரிவித்தார்.

உடனடியாக அவரது தாய் தனலட்சுமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஓசூர் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.அங்கு போதிய மருத்துவ வசதி இல்லாததால், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X