பொது இடங்களில் தடுப்பூசி முகாம் : மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | |
Advertisement
புதுடில்லி :'பூஸ்டர் டோஸ்' எனப்படும், முன் எச்சரிக்கை டோஸ் செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதை அடுத்து, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு போன்ற பொது இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்களை அமைக்கும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நம் நாட்டில் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டன. பின், பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி துவங்கியது. 18
பொது இடங்கள், தடுப்பூசி முகாம் : மாநிலங்கள்  உத்தரவு


புதுடில்லி :'பூஸ்டர் டோஸ்' எனப்படும், முன் எச்சரிக்கை டோஸ் செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதை அடுத்து, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு போன்ற பொது இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்களை அமைக்கும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
நம் நாட்டில் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டன. பின், பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி துவங்கியது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் நடவடிக்கை துவங்கியது.
ஆனாலும், பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் பலரும் ஆர்வம் காட்டவில்லை. இந்த ஊசி செலுத்துவதற்கு தகுதியான 74 கோடி பேரில், 12 கோடி பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர்.


latest tamil news




இதையடுத்து, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அனைத்து மாநில அரசுகளின் சுகாதார அமைச்சர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு, விமான நிலையம் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற பொது இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X