பேரூராட்சி வருவாய்க்கு புது ரூட்; காந்தை ஆற்றில் ஸ்டீம் போட் மாத்தி யோசிங்க!| Dinamalar

பேரூராட்சி வருவாய்க்கு புது ரூட்; காந்தை ஆற்றில் ஸ்டீம் போட் மாத்தி யோசிங்க!

Added : ஆக 17, 2022 | |
மேட்டுப்பாளையம்:காந்தை ஆற்றில், 'ஸ்டீம் போட்' பொழுதுபோக்கு அம்சமாக பயன்படுத்தினால்,சிறுமுகை பேரூராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.சிறுமுகை பேரூராட்சியில் தொழிற்சாலைகள் ஏதும் இல்லை. அனைத்தும் விவசாய நிலப்பகுதிகளாகும். வீட்டு வரி, குடிநீர் கட்டணம் மட்டுமே பேரூராட்சியின் பிரதான வருவாயாகும். இந்நிதி அலுவலக பணியாளர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு
 பேரூராட்சி வருவாய்க்கு புது ரூட்; காந்தை ஆற்றில் ஸ்டீம் போட் மாத்தி யோசிங்க!

மேட்டுப்பாளையம்:காந்தை ஆற்றில், 'ஸ்டீம் போட்' பொழுதுபோக்கு அம்சமாக பயன்படுத்தினால்,சிறுமுகை பேரூராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.சிறுமுகை பேரூராட்சியில் தொழிற்சாலைகள் ஏதும் இல்லை. அனைத்தும் விவசாய நிலப்பகுதிகளாகும். வீட்டு வரி, குடிநீர் கட்டணம் மட்டுமே பேரூராட்சியின் பிரதான வருவாயாகும். இந்நிதி அலுவலக பணியாளர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே, பற்றாக்குறையாக உள்ளது. இதனால் போதிய நிதி இல்லாததால், வளர்ச்சிப் பணிகள் செய்ய முடியாத நிலை தொடர்கிறது.அரசு தரப்பில் வழங்கப்படும் நிதியை மட்டும் எதிர்பாராமல் அந்தந்த பேரூராட்சிகளில் சூழல்களுக்கு ஏற்ப, வருவாய் ஈட்ட ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுக்கவேண்டியது அவசியம்.

பரிசலில் பயணம்
லிங்காபுரம் - காந்தவயல் இடையே காந்தை ஆறு ஓடுகிறது. ஆற்றில் கட்டியுள்ள உயர் மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியதால் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் பரிசலில் பயணம் செய்து வருகின்றனர். காந்தை ஆற்றில் தேங்கியுள்ள தண்ணீர், கடல் போல் காட்சி அளிக்கிறது. இதை வேடிக்கை பார்க்க தினமும், ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கடந்தாண்டு ஆழியாறு அணையிலிருந்து ஸ்டீம் போட் வரவழைத்து, அதில் பள்ளி மாணவர்களை இலவசமாக ஏற்றிச் சென்று வந்தனர்.

பொழுதுபோக்கு அம்சம்
தற்போது பொதுமக்களுக்கு, காந்தை ஆறு தண்ணீர் தேக்கம், பொழுது போக்கு அம்சமாக அமைந்துள்ளது. எனவே சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் புதிதாக ஸ்டீம் போட் வாங்கியோ அல்லது ஆழியாறு அணையிலிருந்து கொண்டு வந்து, நன்கு பயிற்சி பெற்ற ஓட்டுனர்களைக் கொண்டு, காந்தை ஆற்றில் ஓட்ட வேண்டும். காலை, மாலை மட்டும், பள்ளி மாணவர்களை இலவசமாக ஏற்றிச் சென்ற பிறகு, மற்ற நேரங்களில் ஆற்றில், ஸ்டீம் போட்டில் மக்களை, கட்டணம் வசூல் செய்து, நீர் தேக்க பகுதிகளை சுற்றிக்காண்பிக்கலாம். இதன் வாயிலாக சிறுமுகை பேரூராட்சிக்கு வருவாய் கிடைக்கும். எனவே பேரூராட்சி நிர்வாகம் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று, இந்த ஸ்டீம் போட் சேவையை துவங்கினால், பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், பொது மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாகவும் விளங்கும்.

தீர்மானம்
காந்தை ஆற்றில் நீர்மட்டம் மேலும் உயர்ந்தால், பரிசல் பயணத்திற்கு பதிலாக 'ஸ்டீம் போட்' வழங்க மாவட்ட நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நேற்று ஆற்றில் தண்ணீர் அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.இது குறித்து சிறுமுகை பேரூராட்சி தலைவர் மாலதி உதயகுமார் கூறுகையில்," ஸ்டீம் போட், ஆற்றுத் தண்ணீரில் ஓட்டும் திட்டம், பேரூராட்சிக்கு பயனுள்ள வகையில் இருக்கும். இது குறித்து மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்ற பின், நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.உதவி இயக்குனர் துவாரகநாத் சிங் கூறுகையில்,"ஆற்றில் தண்ணீர் மேலும் அதிகரித்தால், 'ஸ்டீம் போட்' வழங்க மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஆற்றில் தண்ணீரின் அளவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது," என்றார்.அத்தியாவசய பயணத்திற்காக மட்டுமே தற்போது ஸ்டீம் போட் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்தி பேரூராட்சியின் வருவாயை உயர்த்த ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்.இது குறித்து சிறுமுகை பேரூராட்சி தலைவர் மாலதி உதயகுமார் கூறுகையில்," ஸ்டீம் போட், ஆற்றுத் தண்ணீரில் ஓட்டும் திட்டம், பேரூராட்சிக்கு பயனுள்ள வகையில் இருக்கும். இது குறித்து மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்ற பின், நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.உதவி இயக்குனர் துவாரகநாத் சிங் கூறுகையில்,"ஆற்றில் தண்ணீர் மேலும் அதிகரித்தால், 'ஸ்டீம் போட்' வழங்க மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஆற்றில் தண்ணீரின் அளவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது," என்றார்.அத்தியாவசய பயணத்திற்காக மட்டுமே தற்போது ஸ்டீம் போட் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்தி பேரூராட்சியின் வருவாயை உயர்த்த ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X