ஒரே நேரத்தில் 28 லட்சம் பேர் தேசிய கீதம் பாடி அசத்தல்

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
ஹைதராபாத் :சுதந்திர தினத்தை முன்னிட்டு தெலுங்கானாவில், 11 ஆயிரம் இடங்களில் ஒரே நேரத்தில் 28 லட்சம் பேர் தேசிய கீதம் பாடினர்.தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, 75வது ஆண்டு சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சுதந்திர தினமான நேற்று முன்
ஒரே நேரம் , 28 லட்சம்  தேசிய கீதம் ,அசத்தல்

ஹைதராபாத் :சுதந்திர தினத்தை முன்னிட்டு தெலுங்கானாவில், 11 ஆயிரம் இடங்களில் ஒரே நேரத்தில் 28 லட்சம் பேர் தேசிய கீதம் பாடினர்.

தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, 75வது ஆண்டு சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


latest tamil news




சுதந்திர தினமான நேற்று முன் தினம் காலை 11:30 மணிக்கு மாநிலம் முழுதும் தேசிய கீதம் பாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒரே நேரத்தில் 11 ஆயிரம் இடங்களில், 28 லட்சம் பேர் தேசிய கீதம் பாடினர். இதற்காக தலைநகர் ஹைதராபாதில் இயங்கும் மெட்ரோ ரயில்கள் 58 வினாடிகளுக்கு நிறுத்தப்பட்டன. அவற்றில் பயணம் செய்தவர்களும், ரயில் ஊழியர்களும் தேசிய கீதம் பாடினர்.
இதேபோல், சாலையில் சென்ற பஸ், கார் மற்றும் இருசக்கர வாகனங்களும் 11:30 மணிக்கு நிறுத்தப்பட்டு, அதில் சென்றவர்கள் தேசிய கீதத்தை உணர்ச்சி வேகத்துடன் பாடினர்.
வீடு, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றிலும் குறிப்பிட்ட நேரத்தில் தேசிய கீதம் பாடப்பட்டது.
நிஜாமாபாத் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் எழுந்து நின்று தேசிய கீதம் இசைத்தனர். மாநிலம் முழுதும் சிறைகளில் உள்ள கைதிகளும் தேசிய கீதம் பாடினர். தலைமைச் செயலகத்தில் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தேசிய கீதம் பாடினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
17-ஆக-202206:31:02 IST Report Abuse
Natarajan Ramanathan நல்ல முயற்சி....ஒவைசியும் பாடினாரா?
Rate this:
Cancel
17-ஆக-202206:10:09 IST Report Abuse
இவன் மிகவும் பாராட்ட வேண்டிய அரசு
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
17-ஆக-202206:05:15 IST Report Abuse
Priyan Vadanad தேசிய கீதம் பாடிய அத்தனை பேருக்கும் சர்டிபிகேட் உண்டா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X