அணையில் தேங்கும் கழிவால் ஆபத்து: குடிநீர், விவசாயம் பாதிக்கும் அவலம்

Added : ஆக 17, 2022 | |
Advertisement
உடுமலை:உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில், துணி உள்ளிட்ட கழிவுகள் தேங்குவதால் சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை, ஆன்மிகம் மற்றும் சுற்றுலா மையமாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து, வரும் சுற்றுலா பயணியர் மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கின்றனர்.அதே போல், மலையிலிருந்து கீழே வரும் தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு,
அணையில் தேங்கும் கழிவால் ஆபத்து:   குடிநீர், விவசாயம் பாதிக்கும் அவலம்

உடுமலை:உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில், துணி உள்ளிட்ட கழிவுகள் தேங்குவதால் சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை, ஆன்மிகம் மற்றும் சுற்றுலா மையமாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து, வரும் சுற்றுலா பயணியர் மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கின்றனர்.அதே போல், மலையிலிருந்து கீழே வரும் தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் குளித்தும், முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் வருகின்றனர்.பஞ்சலிங்கம் அருவி மற்றும் ஆற்றில் குளிக்கும் பொதுமக்கள், தாங்கள் அணிந்து வரும் ஆடைகளை, அப்படியே நீர் நிலைகளில், விட்டு வருகின்றனர்.அதோடு, பிளாஸ்டிக் கழிவுகள், ஷாம்பு, சோப்பு பாக்கெட்கள், உணவு பண்டங்களில் கழிவு ஆகியவற்றை நேரடியாக, ஆற்றில் கலந்து வருகின்றனர். இக்கழிவுகள் நேரடியாக திருமூர்த்தி அணைக்கு வந்து, சேர்ந்து மிகப்பெரிய குப்பை தொட்டியாக மாறுகிறது. திருமூர்த்தி அணை, திருப்பூர், கோவை மாவட்டத்திலுள்ள பி.ஏ.பி., பாசனத்திற்கு ஆதாரமாகவும், ஏழு குளம் பாசனம் மற்றும் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்கள், உடுமலை நகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.அணையில் இவ்வாறு பல நுாறு டன் கழிவுகள் தேங்குவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு, அணையிலுள்ள மீன் உள்ளிட்ட உயிரினங்கள், நீரை பயன்படுத்தும் விவசாயிகள் மற்றும் குடிநீரும் மாசடைகிறது.எனவே, சுற்றுலா பயணியர், அருவி மற்றும் ஆற்றில், நேரடியாக துணிகளை விடவும், பூஜை பொருட்கள், கழிவு பொருட்களை கலப்பதையும் தடுக்க வேண்டும்.அணையில் தேங்கியுள்ள கழிவுகளை உடனடியாக அகற்றுவதோடு, கோவில் வளாகம் மற்றும் பஞ்சலிங்கம் அருவி பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், கழிவுகளுக்கான தனி குப்பைத்தொட்டி அமைக்கவும், வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்துவதை முழுமையாக தடை செய்யவும், அரசு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X