இலவசங்களுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., மனு

Added : ஆக 17, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி : தேர்தலின் போது இலவசங்கள் வழங்குவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தங்களையும் எதிர்தரப்பில் சேர்க்குமாறு, தி.மு.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.'தேர்தல் பிரசாரங்களின் போது பல்வேறு கட்சிகளும் இலவசங்களை அறிவிக்கின்றன. வெற்றி பெற்ற பின் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போதிய நிதி இல்லாமல் மாநில அரசுகள்
DMK,Supreme Court,SC

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : தேர்தலின் போது இலவசங்கள் வழங்குவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தங்களையும் எதிர்தரப்பில் சேர்க்குமாறு, தி.மு.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

'தேர்தல் பிரசாரங்களின் போது பல்வேறு கட்சிகளும் இலவசங்களை அறிவிக்கின்றன. வெற்றி பெற்ற பின் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போதிய நிதி இல்லாமல் மாநில அரசுகள் திணறுகின்றன' என, பா.ஜ.,வை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், இலவச அறிவிப்புகள் பொருளாதார சீரழிவை ஏற்படுத்துவதாக கருத்து தெரிவித்தது.


latest tamil news


இந்த வழக்கில், தி.மு.க., தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம்: நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவைகள் வெவ்வேறாக உள்ளன. அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான திட்டம் என்பது நிச்சயம் பொருந்தாது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்ப மாநில அரசுகள் திட்டங்களை அறிவிக்கின்றன. இதை இலவசங்களாக கருத முடியாது.

வருமானம், அந்தஸ்து, வசதி வாய்ப்புகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை குறைக்கவும், சமூக ஒழுங்கு மற்றும் பொருளாதார நீதியை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. எனவே, தேர்தலில் இலவச திட்டங்களை எதிர்க்கும் வழக்கில் தங்களை எதிர்தரப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
17-ஆக-202209:16:07 IST Report Abuse
GMM வரி பணத்தில் இலவச எதிர்ப்பு வழக்கு. பொருளாதாரம் பாதிக்கும் என்ற அச்சம். மாநிலம் அமைப்பு நிர்வாகம் சம்பந்தப்பட்டது. வழக்கு நாட்டின் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது. எந்த கட்சியும் (திமுகவை ) எதிர்மனுதாரராக ஆரம்பத்தில் சேர்க்க கூடாது. இது வழக்கை நீட்டிக்க செய்யும். குழப்பும். அப்படி என்றால், இலவசம் கொடுத்தால் வரி செலுத்த நிர்ப்பந்திக்க முடியாது என்று வழக்கு தொடர முடியும்? தீர்ப்பில் உள்ள குறையை நீதிமன்றத்தில் முறையிடலாம். யூக அடிப்படையில் மனு. அபராதமும் வசூலித்து, உடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் தொடர்புடையது. மாநிலம், நகராட்சி மற்றும் ஊராட்சிகள் பெற்றுள்ளது limited duty. இலவசம், இட ஒதுக்கீடு, சலுகைகள், வாக்குக்கு பணம் நேர்மையான வேட்பாளர்கள் தேர்விற்கு இடையூராக உள்ளது.
Rate this:
Cancel
17-ஆக-202207:02:48 IST Report Abuse
Tapas Vyas முதல்ல சதி ஒதுக்கீடை ரத்து செய்யங்க, அப்ப உழைக்கணுங்கிற எண்ணம் வரும்-திருட்டு பயலுக
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-ஆக-202205:31:46 IST Report Abuse
Kasimani Baskaran ஓட்டுக்கு அப்பட்டமாக காசு கொடுப்பதை முதலில் சரி செய்ய வேண்டும். அதன் பின்னர் இலவசம் என்ற பெயரில் கமிசனுக்காக கஜானாவை கொள்ளையடிப்பதை தடை செய்ய வேண்டும். யாருக்கு யார் பெனாமி என்பது பொது வெளியிலேயே இருக்கிறது. ஆகவே பெனாமிகளின் சொத்துக்களை சரி பார்த்தாலேயே 99% கறுப்புப்பணம் ஒழியும். கறுப்புப்பணம் ஒழிந்தால் நில புலங்களின் விலை குறையும். சினிமா எடுத்து பணச்சலவை செய்வோரை அடுத்து நொங்கெடுக்கப்போவதாக செய்தி வருகிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X