கோயில் முன் ரயிலை நிறுத்தி வழிபாடு

Added : ஆக 17, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
வடமதுரை : திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் தங்கம்மாபட்டி வண்டிகருப்பணசுவாமி கோயிலில் தனியார் வாகன உரிமையாளர்கள் மட்டுமன்றி அரசு துறையினரும் ஆண்டுக்கு ஒருமுறை ஆடி மாதத்தில் நேர்த்திக்கடனாக ஆடுகளை வெட்டி வழிபட்டு செல்கின்றனர். இதே போன்று இன்ஜினுடன் கூடிய ரயில் பெட்டியும் கோயில் முன் நிறுத்தப்பட்டு ஊழியர்களால் வழிபாடு நடத்தப்பட்டது.நேற்று ஆடி மாதத்தின் இறுதி
வண்டிகருப்பணசுவாமி கோயில்,  ரயில்வே ஊழியர்கள் , வழிபாடு, Vandikarupanaswamy kovil, Railway Employees,

வடமதுரை : திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் தங்கம்மாபட்டி வண்டிகருப்பணசுவாமி கோயிலில் தனியார் வாகன உரிமையாளர்கள் மட்டுமன்றி அரசு துறையினரும் ஆண்டுக்கு ஒருமுறை ஆடி மாதத்தில் நேர்த்திக்கடனாக ஆடுகளை வெட்டி வழிபட்டு செல்கின்றனர். இதே போன்று இன்ஜினுடன் கூடிய ரயில் பெட்டியும் கோயில் முன் நிறுத்தப்பட்டு ஊழியர்களால் வழிபாடு நடத்தப்பட்டது.

நேற்று ஆடி மாதத்தின் இறுதி நாள் என்பதால் கோயிலில் ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன் அருகில் திண்டுக்கல் --திருச்சி ரயில் பாதை இருப்பதால் அவ்வழியே சென்ற இன்ஜினுடன் கூடிய ரயில் பெட்டியை நிறுத்தி ரயில்வே ஊழியர்கள் வழிபட்டனர்.

கோயில் பூஜாரிகள் கூறுகையில், 'இக்கோயிலில் வாகனங்கள் விபத்தின்றி பயணிக்க வேண்டி செய்யப்படும் நேர்த்திக்கடன் வழிபாடுகளே அதிகம். மற்ற நேர்த்திக்கடன் செலுத்துவோரும் உள்ளனர். அரசு துறையினரை போல் ரயில்வே எலெக்ட்ரிக்கல் பராமரிப்பு பிரிவு ஊழியர்களும் இன்ஜினுடன் கூடிய ரயில் பெட்டியை, ரயில் போக்குவரத்து இல்லாததை உறுதி செய்து பின் கோயில் முன் சில நிமிடங்கள் நிறுத்தி வழிபட்டு சென்றனர்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-ஆக-202211:50:56 IST Report Abuse
Bhaskaran வீரமணி சுபவீ. கும்பலுக்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்ததது
Rate this:
David DS - kayathar,இந்தியா
22-ஆக-202214:35:01 IST Report Abuse
David DSஅவங்க எல்லாம் முக்காடு போட்டுக்கிட்டு அந்த கோவிலுக்கு தான் போயிருக்காங்க, வந்து கருது சொல்வாங்க...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
17-ஆக-202210:45:14 IST Report Abuse
duruvasar எதுகுங்க வீரமணியை இப்படி கடுப்பேத்றீங்க.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
17-ஆக-202209:36:09 IST Report Abuse
Sampath Kumar திராவிட விஷத்தால் திராவிட மாடல் ஆட்சியில் இது சாத்தியமே அணைத்து மதத்தையும் ஒன்றாக மதிப்புத்து தான் இந்த ஆட்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X