வந்தது விஜயகாந்த் தானா? தே.மு.தி.க.,வினர் சந்தேகம்!

Added : ஆக 17, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
சென்னை : கட்சி அலுவலகத்திற்கு வந்தது விஜயகாந்த் தானா என்ற சந்தேகம், தே.மு.தி.க.,வினருக்கு ஏற்பட்டு உள்ளது.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உடல் நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கி விட்டார். நீரிழிவு பிரச்னையால், அவரது காலில் மூன்று விரல்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை கோயம்பேட்டில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், சுதந்திர தின விழாவில் கொடியேற்ற
DMDK,Vijayakanth,விஜயகாந்த்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : கட்சி அலுவலகத்திற்கு வந்தது விஜயகாந்த் தானா என்ற சந்தேகம், தே.மு.தி.க.,வினருக்கு ஏற்பட்டு உள்ளது.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உடல் நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கி விட்டார். நீரிழிவு பிரச்னையால், அவரது காலில் மூன்று விரல்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை கோயம்பேட்டில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், சுதந்திர தின விழாவில் கொடியேற்ற விஜயகாந்த் வருவதாக தகவல் வெளியானது. அவரை காண தொண்டர்கள் திரண்டனர். விஜயகாந்தின் பிரசார வாகனம் அங்கு வந்ததும், தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.


latest tamil news


பிரசார வாகனத்தில் இருந்து, விஜயகாந்த் மனைவி பிரேமலதா, முதலில் தலையை காட்டினார். தொண்டர்களை பார்த்து கையசைத்தார். தொடர்ந்து, உட்கார்ந்தபடியே விஜயகாந்த் தலையை காட்டினார். அவர் முக கவசமும், கண்ணாடியும் அணிந்திருந்தார். தொண்டர்களை பார்த்து கையை அசைத்தபோது, அவரது கண்ணாடி நழுவியது. சுதாரித்த பிரேமலதா, அவருக்கு கண்ணாடியை போட்டு விட்டார்.

பின், தேசிய கொடியேற்றுவதற்காக கயிறை பிரேமலதா இழுத்தார். அவரால் இழுக்க முடியாததால், மாநில துணை செயலர் பார்த்தசாரதி கொடியை இழுத்து கொடுத்தார். விஜயகாந்தின் முக கவசத்தை எடுத்து விட்டு, அவருக்கு பிரேமலதா, இனிப்பு ஊட்ட முயன்றார்.


latest tamil news


விஜயகாந்திடம் இருந்து எந்த அசைவும் இல்லை. மீண்டும் சுதாரித்த பிரேமலதா முக கவசத்தை லேசாக திறந்து, இனிப்பை வாயில் திணித்து மூடிவிட்டார். அப்போதும், விஜயகாந்திடம் எந்த அசைவும் இல்லை. பின், விஜயகாந்தின் பிரசார வாகனம் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றது. இதனால், கட்சி அலுவலகத்திற்கு வந்தது விஜயகாந்தா என்ற சந்தேகம், அக்கட்சியினருக்கு ஏற்பட்டு உள்ளது.

தேசிய கொடி ஏற்றுவதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆனால், பிரசார வாகனத்தில் இருந்தபடி, பிரேமலதா தேசிய கொடி ஏற்றியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KMP - SIVAKASI,இந்தியா
18-ஆக-202209:45:34 IST Report Abuse
KMP In 2011 TN assembly election, DMDK played an significant role in alliance with ADMK for the victory.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
17-ஆக-202211:29:23 IST Report Abuse
duruvasar புதிய சட்ட மன்ற கட்டிடத்தை திறந்து வைக்கும் போது 3 கோடி ரூபாய் செலவில் மேர்க்கூறை செட் போட்டு அழகு பார்தவர்கள் வாழ்ந்த மாநிலம் இது.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
17-ஆக-202210:41:41 IST Report Abuse
sankaseshan தமிழ்நாட்டில் தான் இந்த மாதிரி கூத்துக்கள் நடக்கும் தொண்டர்கள் கருத்து உண்மையாக இருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X