பா.ஜ.,வுடன் குறைந்தபட்ச சமரசம் கூட கிடையாது: ஸ்டாலின் திட்டவட்டம்

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (61) | |
Advertisement
சென்னை : ''மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே உறவு உள்ளது. தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே உறவு இல்லை. பா.ஜ.,வுடன் குறைந்தபட்ச சமரசத்தை கூட, தி.மு.க., செய்து கொள்ளாது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை, கலைவாணர் அரங்கில், வி.சி., கட்சி தலைவர் திருமாவளவனின் மணி விழா நடந்தது. அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க.,வுக்கும், வி.சி.,க்கும் இடையே இருப்பது அரசியல்
MK Stalin, DMK, BJP, Stalin, CM Stalin

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : ''மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே உறவு உள்ளது. தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே உறவு இல்லை. பா.ஜ.,வுடன் குறைந்தபட்ச சமரசத்தை கூட, தி.மு.க., செய்து கொள்ளாது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை, கலைவாணர் அரங்கில், வி.சி., கட்சி தலைவர் திருமாவளவனின் மணி விழா நடந்தது. அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க.,வுக்கும், வி.சி.,க்கும் இடையே இருப்பது அரசியல் உறவு அல்ல; கொள்கை உறவு. இதை யாராலும் பிரிக்க முடியாது.தி.மு.க., நிலைத்து நிற்பதற்கு காரணம், அடிப்படை கருத்தியலில் நிற்பது தான். கோட்டையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தி.மு.க., கொள்கை ஒன்று தான்.

'பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகளுடன், குறைந்தபட்ச சமரசத்தை கையாண்டால் கூட, தி.மு.க., அணியில் பா.ஜ., எதிர்ப்பு என்பது மெல்ல மெல்ல நீர்த்து போகும்' என, திருமாவளவன் கூறி உள்ளார். தி.மு.க., குறைந்தபட்ச சமரசத்தை கூட செய்து கொள்ளாது. நான் இரு பொறுப்புகளில் உள்ளேன். ஒன்று, கட்சித் தலைவர் பதவி; மற்றொன்று அனைவருக்குமான முதல்வர் பதவி.


latest tamil news


டில்லிக்கு காவடி துாக்கவா போகிறேன்? கைகட்டி வாய் பொத்தி உத்தரவு என்ன என்றா கேட்க போகிறேன்? முதல்வர் என்ற முறையில், மத்திய அரசிடம் பேசி, தமிழகத்திற்கு தேவையான திட்டங்களைப் பெற வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு.மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே உறவு உள்ளது. தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே உறவு இல்லை.

தி.மு.க., கொள்கைக்கும், பா.ஜ., கொள்கைக்கும் இடையே, எந்த உறவும் கிடையாது. எனவே திருமாவளவன் கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம்.எந்த சூழ்நிலையிலும், எந்தக் காலத்திலும் தி.மு.க.,வின் கொள்கைகளை, ஸ்டாலின் விட்டுக் கொடுக்க மாட்டான்; குறைந்தபட்ச சமரசமும் செய்து கொள்ள மாட்டான். இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி என்று கூறுகிறோம். இது, தி.மு.க., கொள்கை முழக்கம்; தொடர்ந்து ஒலிக்கும்.

இதனால் தான் சனாதனவாதிகளால், இந்த அரசு அதிகப்படியான தாக்குதலுக்கு உள்ளாகிறது. நான் அதிகம் விமர்சிக்கப்படுகிறேன். திருமாவளவன் பிறந்த நாளில், சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம்; ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம் என்ற உறுதிமொழியை வழிமொழிகிறேன். சங்ககாலத் தமிழகத்திற்கு எதிரானது, சனாதன சக்திகளின் சங்கத்துவம். அதை ஒன்றிணைந்து வீழ்த்துவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஆக-202213:37:17 IST Report Abuse
ரமேஷ் ....
Rate this:
Cancel
Senthil Kumar - chennai,இந்தியா
17-ஆக-202212:52:14 IST Report Abuse
Senthil Kumar சங்கி எப்போதும் தி மு க ஊழல் கட்சி சொல்லுவானுக , அந்த ஊழலை கண்டுபுடி சொன்ன ,இந்த சங்கி விஞ்ஞான ஊழல் சொல்லுவானுக ,ஆகா மொத்தம் இவனுக நாங்கதான் அறிவாளி சொல்லிவனுக ,இவனுக தான் விஞ்சான ஊழல் சொல்லுவானுக , இவனுக தான்அறிவாளி நினைப்பு அத சில நம்ம தத்தி சங்கி நம்பி அவனுக பின்னால போகுது , வாயால் வடை சுடுவானுக ,அதற்க்கு முட்டு கொடுக்கும் சங்கி இங் ஏராளம் ஏராளம் .
Rate this:
raja - Cotonou,பெனின்
17-ஆக-202215:38:56 IST Report Abuse
raja.......
Rate this:
raja - Cotonou,பெனின்
17-ஆக-202217:46:46 IST Report Abuse
rajaஇப்போ புதுசா போக்குவரத்து துறையில கொள்ளையோ கொள்ளை அடிக்கிறானுவோளா...
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
17-ஆக-202212:51:20 IST Report Abuse
Ramesh Sargam திமுகவிடம் எந்தவித சமரசத்தையும் பாஜக வும் எதிர்பார்க்கவில்லை. பாஜக வின் கொள்கையே (policy) "துஷ்டனை கண்டால் தூர விலகு" என்பதே ஆகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X