அகவிலைப்படி உயர்வு ஏமாற்றமளிக்கிறது: ஆசிரியர் கூட்டணி அதிருப்தி

Added : ஆக 17, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
மதுரை : அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வு ஏமாற்றம் அளிக்கிறது என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அதிருப்தி தெரிவித்துள்ளது.இதுகுறித்து இதன் மதுரை மாவட்ட தலைவர் சீனிவாசன் கூறியதாவது: மத்திய அரசு, விலைவாசி புள்ளியை கணக்கிட்டு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை பரிந்துரைத்து மத்திய அரசு
அகவிலைப்படி உயர்வு, ஆசிரியர் கூட்டணி, அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை : அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வு ஏமாற்றம் அளிக்கிறது என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இதன் மதுரை மாவட்ட தலைவர் சீனிவாசன் கூறியதாவது: மத்திய அரசு, விலைவாசி புள்ளியை கணக்கிட்டு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை பரிந்துரைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு நிர்ணயிக்கிறது. அதை பின்பற்றி மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறையை தமிழக அரசு பல ஆண்டுகளாக கடைபிடிக்கவில்லை.

மத்திய அரசு ஜன.,1 முதல் மூன்று சதவீதம் உயர்வை அறிவித்தும் வழக்கம்போல் இந்தாண்டும் மாநில அரசு அதுகுறித்து சிந்திக்காமல் ஆறு மாதங்கள் நிறுத்திவைத்துள்ளன. கொரோனாவின் போது மத்திய அரசு வழங்கியபோதும் மாநில அரசு 18 மாதங்கள் அகவிலைப் படி உயர்வை நிறுத்தி வைத்தன.


latest tamil news



தமிழக அரசு காலதாமதமாக உயர்வை அறிவிப்பதும், அறிவிக்கும் போது ஆறு மாதங்கள் உயர்வை பறித்துகொள்வது என்ற தந்திரத்தை கையாள்வது வழக்கமாக உள்ளது. எனவே அகவிலைப்படி உயர்வை ஜூலை 1 முதல் என்பதற்கு பதில் ஜன., 1 முதல் முன்தேதியிட்டு வழங்க அரசு உத்தரவிட வேண்டும், என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஆக-202219:36:05 IST Report Abuse
அப்புஜாமி ////
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
17-ஆக-202218:05:42 IST Report Abuse
Ram திராவிட மாடல் , சுருட்டும் மாடல் , ஆசிரியர்களை இவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்று இதிலிருந்து புரிகிறது , அப்போ ஆசிரியர்கள் எப்படி அர்ப்பணிப்போடு பணிபுரிவார்கள் ....
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
17-ஆக-202216:05:54 IST Report Abuse
தமிழ்வேள் இந்த வேலை வெட்டியற்ற வாத்தியாருக்கு , ஒவ்வொருத்ததனுக்கும் கஜானாவையே கொடுத்தாலும் போதாது ...விடியாது ....இவனுவோளுக்கு சம்பளமே தண்டம் ..அப்புறம் என்ன அகவிலைப்படி ? எல்லாம் திருட்டு திமுக அடிமைகள் ..சமூக குடிகேடி கிருமிகள் ......ஒழிக்கப்படவேண்டும் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X