விநாயகர் சிலைகளுக்கு கட்டுப்பாடு: மனு தள்ளுபடி

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை : விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, மாநிலம் முழுதும் குறைந்த எண்ணிக்கையில் விநாயகர் சிலைகளை அமைக்க உத்தரவிட கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.திருப்பூரைச் சேர்ந்த ஹிந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 31ல் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர்
 விநாயகர் சிலை, கட்டுப்பாடு, மனு தள்ளுபடி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, மாநிலம் முழுதும் குறைந்த எண்ணிக்கையில் விநாயகர் சிலைகளை அமைக்க உத்தரவிட கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூரைச் சேர்ந்த ஹிந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 31ல் கொண்டாடப்பட உள்ளது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது, பொது இடங்கள், சாலைகள் மற்றும் பிற மத வழிபாட்டு தலங்களுக்கு அருகில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகின்றன. அதனால் போக்குவரத்து இடையூறும், சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.அதேபோல, சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதையும் வரன்முறைப்படுத்த எவ்வித விதிகளும் வகுக்கப்படவில்லை.


latest tamil news


விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு என, ஹிந்து அமைப்புகள் வசூலிக்கும் நன்கொடையை கண்காணிக்க வேண்டும். மேலும், மாநிலம் முழுதும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும் என, ஹிந்து அமைப்புகளை அறிவுறுத்துமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம், 'நன்கொடை வசூலிப்பவர்கள் யார்?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'ஹிந்து அமைப்புகள்' என, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, வழக்கில் அந்த அமைப்புகளை எதிர் மனுதாரராக இணைத்து, புதிய மனு தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
visu - tamilnadu,இந்தியா
17-ஆக-202213:58:15 IST Report Abuse
visu இந்து போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கும் திராவிடர் கழக உறுப்பினன்
Rate this:
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
17-ஆக-202213:25:34 IST Report Abuse
Kundalakesi Islam Christian does lot of anti environment things during their festivals. None has filed complaints. Hindus are enemy for Hindu community.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
17-ஆக-202212:22:24 IST Report Abuse
duruvasar தலைவர் பிறந்த நாட்கள் விழா என நிதி வசூல் செய்து பொது இடத்தில் கூட்டம் கூட்டி ஊரையே நாஸ்தி ஆக்குகிரார்களே அப்போ நீங்கல்லாம் எங்க போய் தொலையீரங்க.
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
17-ஆக-202218:41:11 IST Report Abuse
சாண்டில்யன்யாரும் யோக்கியமில்லைன்னு ஆகிப்போனதா ஒத்துக்கறாங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X