எல்லையில் சீனாவுக்கு இந்தியா பதிலடி; நவீனமாகும் ராணுவம்

Added : ஆக 17, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
புதுடில்லி : கிழக்கு லடாக் எல்லையில் சீனாவுக்கு பதிலடி தரும் விதம் உள்நாட்டில் தயாரான ட்ரோன், தாக்குதல் படகு, போர் வாகனம், தானியங்கி தகவல் தொடர்பு சாதனம் உள்ளிட்ட பல்வேறு நவீன தளவாடங்களை ராணுவத்திடம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்படைத்தார்.இந்திய - சீன எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் அப்பகுதியில் இந்திய ராணுவம் நேற்று தாக்குதல்
எல்லை, சீனா, இந்தியா பதிலடி, ராணுவம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : கிழக்கு லடாக் எல்லையில் சீனாவுக்கு பதிலடி தரும் விதம் உள்நாட்டில் தயாரான ட்ரோன், தாக்குதல் படகு, போர் வாகனம், தானியங்கி தகவல் தொடர்பு சாதனம் உள்ளிட்ட பல்வேறு நவீன தளவாடங்களை ராணுவத்திடம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்படைத்தார்.

இந்திய - சீன எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் அப்பகுதியில் இந்திய ராணுவம் நேற்று தாக்குதல் ஒத்திகை நடத்தியது. லடாக்கில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்த பாங்காங் ஏரியில் பாதி இந்தியா வசமும், மீதம் சீனா கட்டுப்பாட்டில் உள்ளது.ராணுவத்துக்கு புதிதாக வழங்கப்பட்ட இந்த நவீன தாக்குதல் படகில் ஒரே நேரத்தில் 35 வீரர்கள் பயணிக்கலாம். ஏரியின் எந்த பகுதியையும் துரிதமாக சென்றடையலாம். இதற்கான ஒத்திகையில் நேற்று வீரர்கள் ஈடுபட்டனர்.


latest tamil news


இதுதவிர உள்நாட்டில் தயாரான ஆளில்லா ட்ரோன் விமானம், போர் வாகனங்களும் ராணுவத்திடம் வழங்கப்பட்டன. 'எப்-இன்சாஸ்' எனும் எதிர்கால தரைப்படை வீரர்களுக்கான அமைப்பை ராணுவத்திடம் அளிக்கும் நிகழ்ச்சியும் டில்லியில் நேற்று நடந்தது. இதன்படி ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ஏ.கே. - 203 ரக துப்பாக்கி, பாலிஸ்டிக ரக தலைக்கவசம், அதிநவீன கண்ணாடி, துப்பாக்கி குண்டு துளைக்காத ஆடை வீரர்களுக்கு வழங்கப்படும்.

தலைக்கசவத்தில் 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் வசதி, இரவு நேரத்திலும் துல்லியமாக பார்க்க உதவும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் என பாதுகாப்புத்துறை குறிப்பிட்டுள்ளது.லடாக்கில் உள்ள உலகின் மிகப்பெரிய போர்முனையான சியாச்சின் பனிப்பாறை அருகே பார்தாபூர் ராணுவ தளத்தில் ஒரு மெகாவாட் சூரியஒளி மின்உற்பத்தி நிலையமும் ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
17-ஆக-202220:52:52 IST Report Abuse
Venkatakrishnan சீனா காரன் இந்திய எல்லைக்குள்ள நெடுஞ்சாலை போடுறானாமே அத மொதல்ல தட்டிக் கேளுங்க
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
17-ஆக-202219:47:16 IST Report Abuse
MARUTHU PANDIAR எப்போதோ எதிர்பார்க்கப் பட்ட ஆபத்து இதோ நம் கண் முன்னே+++++++ஆம், எதிர் காலத்தில் இது இன்னும் அடிக்கடியும் ,இன்னும் பெரிய அளவிலும் நடக்கும் எல்லா வாய்ப்புகளும் இருப்பதாகச் சொல்லுகிறார்கள்+++++மத்தியில் தனக்கு அடங்கி நடக்கும் இத்தாலி ஆட்சிக்கு காத்திருக்க விருப்ப மில்லாததால், சப்பை மூக்கன் போட்ட இந்தியாவுக்கான இலங்கை/தமிழக ரூட் இது என்கிறார்கள்+++++++ தமிழகத்திலிருந்து அதிக ஒத்துழைப்பும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப் படுகிறதாம்+++++ ஆனால் உண்டி குலுக்கிகள் சகிதம் ஆட்சி செய்வோர் உணர்வில் இது உரைத்ததா தெரிய வில்லை+++++ஏன்ரூ 200 டாஸ்மாக் மண்டைகளுக்குள்ளும் உரைப்பதாகத் தெரிய வில்லை++++++++இதுவே பல மக்களின் கவலையாக இருக்கிறது.என்கிறார்கள்.
Rate this:
Cancel
17-ஆக-202216:05:13 IST Report Abuse
அப்புசாமி நமது வீரர்கள் போற பஸ்கள்.பள்ளத்தில் விழுந்து சாவுறாங்க. அதுக்கு உள்நாட்டில் ஏதாவது தயாரிச்சு காப்பாத்துங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X